2024 Public Holidays: எப்படா விடுமுறை நாட்கள் வரும் என பள்ளி மாணவர்களை விட வேலைக்கு செல்பவர்கள் தான் அதிக ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். ஆனால் இந்த வருட ஆங்கில புத்தாண்டு ஞாயிற்றுக்கிழமையில் அமோகமாக தொடங்கி ஒட்டுமொத்த மக்களுக்கும் அதிர்ச்சியை தாராளமாக வழங்கியது.
அதைத்தொடர்ந்து வந்த பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளும் ஞாயிற்றுக்கிழமையாக வந்து சோதித்தது. அவ்வளவு ஏன் நாளை நாம் கொண்டாட இருக்கும் தீபாவளி கூட ஞாயிற்றுக்கிழமை தான். இப்படி இந்த வருட பொது விடுமுறையில் ஐந்து நாட்களை ஞாயிற்றுக்கிழமை எடுத்துக் கொண்டது. ஆனால் வரும் 2024ம் வருடம் அப்படி கிடையாது.
ஆரம்பமே அமர்க்களம் என்ற கதையாக ஆங்கில புத்தாண்டு திங்கள் அன்று தொடங்குகிறது. இதற்கான முழு பட்டியலை தமிழக அரசு இப்போது வெளியிட்டுள்ளது. அதன்படி ஜனவரி மாதத்தில் மட்டுமே ஆறு பொது விடுமுறை நாட்கள் வந்து அனைவரையும் குஷிப்படுத்தியுள்ளது. இதன் மொத்த விவரங்களை இங்கு காண்போம்.
கிழமை வாரியாக விடுமுறை நாட்கள்
- திங்கள் – 6
- செவ்வாய் – 2
- புதன் – 5
- வியாழன் – 4
- வெள்ளி – 3
- சனி – 2
- ஞாயிறு – 2
இவ்வாறாக 24 நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் வார நாட்களில் தான் அதிக விடுமுறை வருகிறது. அதிலும் திங்கட்கிழமை மற்ற நாட்களை விட முன்னிலையில் இருக்கிறது. அப்படி பார்த்தால் வேலைக்கு செல்பவர்கள் ஞாயிற்றுக்கிழமையும் சேர்த்து இரு நாட்களை ஜாலியாக என்ஜாய் செய்ய முடியும்.