வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

கோலிவுட்டில் அதிகரிக்கும் விவாகரத்து.. 2024 இல் அதிர்ச்சியை ஏற்படுத்திய 4 ஜோடிகள்

AR Rahman : பொதுவாக பாலிவுட்டில் தான் திருமணம் செய்து கொண்டு பிடிக்கவில்லை என்றால் உடனே விவாகரத்து செய்வது சாதாரண விஷயமாக இருந்து வந்தது. ஆனால் இப்போது கோலிவுட்டில் எதிர்பார்க்காத பல ஜோடிகள் அடுத்தடுத்து விவாகரத்து செய்தியை அறிவித்து வருகின்றனர்.

அதில் குறிப்பாக தனுஷ் கடந்த 2022 ஆம் ஆண்டு தனது 17 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அறிவித்திருந்தார். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ள நிலையில் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவருமே மனம் ஒத்து பிரிய போவதாக அறிவித்திருந்தனர்.

அதற்கான வழக்கு தற்போது வரை நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் சூழலில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து கடைசியில் திருமணம் செய்து கொண்ட இவர்கள் விவாகரத்து அறிவித்தது அதிர்ச்சியாக இருந்தது.

2024 விவாகரத்து கோரி அதிர்ச்சியை ஏற்படுத்திய ஜோடிகள்

அடுத்ததாக கோலிவுட்டில் முக்கிய ஜோடியாக பார்க்கப்பட்டது ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி தான். இவர்களுக்கும் இரண்டு மகன்கள் உள்ள நிலையில் தங்களது 15 வருட திருமண பந்தத்தில் இருந்து பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்தார். ஆனால் ஆர்த்தி தரப்பிலிருந்து இப்போதும் ஜெயம் ரவியுடன் இணைந்து வாழும் முடிவில் தான் இருக்கிறார்.

ஜெயம் ரவி தான் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்காமல் இருக்கிறார். இந்நிலையில் நேற்றைய தினம் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இசை புயல் ஏஆர் ரகுமான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு இருவரும் விவாகரத்து பெற்று பிரியப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கிட்டத்தட்ட 29 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் விவாகரத்து பெரும் முடிவில் இருப்பதாக அவர்களே கூறியிருக்கின்றனர். இப்படி 2024 அதிர்ச்சியை ஏற்படுத்தும்படி கோலிவுட் பிரபலங்களின் விவாகரத்து செய்தி ரசிகர்களை கலக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Trending News