வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

2024 சூர்யாவின் அடுத்தடுத்து வெளிவர உள்ள 5 படங்கள்.. வாடி வாசலில் சீரும் காளையாய் சினம் கொண்ட ரோலக்ஸ்

Actor Surya: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படத்தில் கமலுக்கு அடுத்து பெரிதும் வரவேற்பை பெற்ற கதாபாத்திரம் ரோலக்ஸ். இக்கதாபாத்திரத்தை முறியடிக்கும் விதமாக சூர்யா படைப்பில் உருவாகும் அடுத்தடுத்த படங்களை பற்றி இங்கு காணலாம்.

எத்தகைய மாறுபட்ட கதாபாத்திரமானாலும் அதை சிறப்புற நடித்துக் கொடுப்பவர் சூர்யா. இவரை வைத்து படம் எடுக்க இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டும் நிலையில் வணங்கான் படத்தில் இவரின் முதல் போஸ்டர் வெளியாகிறது.

Also Read: வருமா வராதா வாடிவாசல்.? வெறுத்துப்போன சூர்யா.. சண்டை இயக்குனருடன் மீண்டும் போடும் கூட்டணி

அதன் பின் இயக்குனர் பாலா உடன் ஏற்பட்ட முரண்பாடால் இப்படத்தை அருண்குமார் மேற்கொண்டார். இத்தகைய சம்பவத்திற்கு பிறகு சூர்யா, சிவா இயக்கத்தில் தனது 42 வது படமான கங்குவா படப்பிடிப்பில் பிசியாக இருந்து வருகிறார். இப்படத்திற்கு இவர் மேற்கொள்ளும் வொர்க் அவுட்டுற்கு கிடைத்த எதிர்பார்ப்பே அதிகம்.

அதற்குப் பின் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா, ஆண்ட்ரியா ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் தான் வாடிவாசல். இப்படத்தில் இவரின் கெட்டப் சீரும் காளையாக சினம் கொண்டு தன்னுடைய ரோலக்ஸ் கதாபாத்திரத்தையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு இவரின் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Also Read: குணசேகரனின் 40% சொத்து சுக்கு நூறாக போன பரிதாபம்.. ஜனனியை ஆட்டிப் படைக்க போகும் ஜீவானந்தம்

மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, சூர்யா, அருண் தாஸ் ஆகியோர் நடிக்க இருக்கும் படம் தான் கைதி 2. இப்படத்தில் சூர்யா வில்லன் கதாபாத்திரத்தை ஏற்றாலும் அதற்கு ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இதைத்தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் சூர்யா, ஜோதிகா இணைந்து நடிக்கும் படமும் உருவாகப்பட்டு வருகிறது.

இப்படம் இசை புயல் ஏ ஆர் ரகுமானுக்கு 100வது படம் ஆகும். மேலும் ஏ ஆர் ரகுமான்- சூர்யா கூட்டணியில் இது 10வது படமாகும். மேற்கொண்டு தன் பகையை மறந்து பாலா இயக்கத்தில் கே வி குகன் தயாரிப்பில் கர்ஜனை என்னும் ஆக்சன் கலந்த திரில்லர் படத்தில் கமிட்டாகி உள்ளார் சூர்யா. இப்படத்தில் நியாயத்திற்கு குரல் கொடுக்கும் கதாபாத்திரத்தை ஏற்று இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று தரும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் இடையே உருவாக்கி வருகிறது.

Also Read: அதிரடியாக வெளியான பிக்பாஸ் சீசன் 7 அப்டேட்.. கவர்ச்சி நடிகையை களம் இறக்க தயாராகும் விஜய் டிவி

Trending News