வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

2024 இல் அதிக கலெக்ஷன் செய்த டாப் 10 தமிழ்ப் படங்கள்.. ரஜினியை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன்

2024 Top 10 Highest Collection Movies In Tamil : 2024ஆம் ஆண்டு தொடக்கத்தில் எந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் இரண்டாம் பாதியில் நிறைய பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகி வசூலை குவித்தது.

அந்த வகையில் டாப் 10 இடங்களைப் பிடித்த படங்களின் பட்டியல் விவரங்களை பார்க்கலாம். அதில் கடைசியாக பத்தாவது இடத்தில் 60 கோடி வசூல் செய்து அருள் நிதியின் டிமான்டி காலனி பார்ட் 2 படம் இடம் பெற்று இருக்கிறது.

அடுத்ததாக ஒன்பதாவது இடத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படம் 80 கோடி வசூலை பெற்றது. சுந்தர் சி யின் அரண்மனை 4 படம் 105 கோடி வசூல் செய்து எட்டாவது இடத்தில் உள்ளது.

2024 இல் அதிக வசூல் செய்த பத்து படங்கள்

சூர்யாவின் கங்குவா படம் 120 கோடி வசூல் செய்து ஏழாவது இடத்திலும், இந்தியன் 2 படம் 150 கோடி வசூல் செய்து ஆறாவது இடத்திலும் உள்ளது. தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் 155 கோடி வசூல் பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

மேலும் இந்த வருடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படம் தான் விஜய் சேதுபதியின் மகாராஜா படம். இப்படம் 178 கோடி வசூலை எட்டியது. ரஜினியின் வேட்டையன் படம் 265 கோடி வசூல் செய்து மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட 340 கோடி வசூலை அள்ளியது. முதல் இடத்தில் எப்போதும் போல வசூல் மன்னனாக இருக்கும் விஜய்யின் கோட் படம் பெற்றிருக்கிறது.

இந்தப் படம் 448 கோடி வசூலை பெற்றிருந்தது. மேலும் ரஜினியின் வேட்டையன் படத்தை சிவகார்த்திகேயனின் அமரன் படம் பின்னுக்கு தள்ளியது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

- Advertisement -

Trending News