திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

2024-ல் 1000 கோடி உறுதியா அடிக்க காத்திருக்கும் 5 படங்கள்.. ஜெயிலருக்கு டஃப் கொடுக்க வரும் ரெண்டு ஹீரோஸ்

2024 upcoming Big Budget tamil films: பிரம்மாண்ட தயாரிப்பில் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் வெளிவரும் படங்கள், படங்களை வெற்றி பெற வைக்க விளம்பர மற்றும் வியாபார தந்திரங்கள் என படத்தின் பட்ஜெட்டும், வசூலும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. இந்திய சினிமா வியாபார நோக்கத்தையே அடிப்படையாகக் கொண்டு போட்டி போட்டு முன்னேறி வருகிறது.

படத்தின் நாயகர்களுக்கு சில நூறு கோடிகளில் சம்பளம் கொடுக்கும் இந்திய சினிமா வசூலை ஆயிரம் கோடிகளில் எதிர்பார்ப்பது தவறில்லையே.  இத்தகைய தந்திரங்கள் பாலிவுட்டில் மட்டுமே நிகழ்ந்திருந்த நிலையில் இப்போது கோலிவுட்டிலும் தலை தூக்கி உள்ளது. ஆயிரம் கோடியை எட்டி விடும் நோக்கில் தயாரிக்கப்படும் தமிழ் சினிமாக்கள் மற்றும் வசூலை எட்ட போராடும் இயக்குனர்கள் இதோ

தங்கலான்: விக்ரம், மாளவிகா மோகன்,பசுபதி போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் தங்கலான் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. கோலார் தங்க வயலில் வேலை பார்த்த பழந்தமிழர்களின் கதையை தழுவிய படமாகும். நடிகர்களை கசக்கி பிழியும் இயக்குனர், கேரக்டர்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் நடிகர் என பல பிளஸ்களுடன் உருவாகும் தங்கலான் வியாபார நோக்கிலும் ஆயிரம் கோடியை தாண்டும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இந்தியன் 2: ஊழலுக்கு எதிராக களம் இறங்கி வெளுத்து கட்டி இருந்த இந்தியன் தற்போது 27 ஆண்டுகள் கழித்து திரும்பவும் அதே வேகத்துடன் வருகிறார். பிரம்மாண்ட இயக்குனரின் படைப்பில் அனிருதீன் இசையில் சுபாஷ்கரண் தயாரிப்பில் கமல், சித்தார்த், எஸ் ஜே சூர்யா, காஜல் அகர்வால், பிரியா பவானி  சங்கர் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்த இந்தியன் 2 அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்யப்படும் என தகவல்கள் வந்துள்ளது. 1000 கோடி வசூலை அடைய இந்தியன் தாத்தா பயங்கிர திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.

Also Read: ஹிட் படங்களை வைத்து காசு பார்க்கலாம் என 2023-இல் ரீமேக் செய்து படுதோல்வி அடைந்த 6 படங்கள்

கங்குவா: பான் இந்தியா மூவியாக பல மொழிகளில் தயாராகி வரும் கங்குவா வை இந்திய சினிமாவே எதிர்நோக்கியுள்ளது பிரம்மாண்ட பொருட்செலவில், நுட்பமான சண்டை காட்சிகளுடன் ஹாலிவுட் தரத்திற்கு ரெடி பண்ணி வருகிறார் சிறுத்தை சிவா. சூர்யா இப்படத்தில் ஆறு வேடங்களில் நடிக்கின்றார் பாபி தியோல், திஷா பதானி, நடராஜ் சுப்பிரமணியம், கே எஸ் ரவிக்குமார், யோகி பாபு, கோவை சரளா, ஆனந்தராஜ் என பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர் இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு  முடிய உள்ளது என்பது கூடுதல் தகவல்.

தலைவர் 171: நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வெளிவந்த ஜெயிலரின் வசூலோ 650 கோடிக்கு மேல்.  இந்த சாதனையை முறியடிக்கும் பொருட்டு தலைவர் 171காக சூப்பர் ஸ்டார் வெற்றி இயக்குனர் லோகேஷ் உடன் கூட்டணி சேர்ந்துள்ளார். தான் இயக்கிய படங்கள் அனைத்தையுமே பிளாக் பஸ்டர் ஹிட் ஆக்கி வசூலை தெறிக்க விட்ட வசூல் கிங் லோகேஷின் மேல் திரை உலகத்தினர் அனைவரது பார்வையும் உள்ளது. மேலும் கமலின் இந்தியன் 2, சூர்யாவின் கங்குவா என போட்டி கடுமையாக உள்ள நிலையில் மீண்டும் சூப்பர் ஸ்டார் அவர்கள் தன்னை பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பதை நிரூபிப்பாரா  என பொறுத்திருந்துதான் காண வேண்டும்.

கேப்டன் மில்லர்: தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அடுத்த ஆண்டு வெளிவர இருக்கும் ஆக்சன் திரில்லர் திரைப்படம் கேப்டன் மில்லர். பிரம்மாண்ட பட்ஜெட்டில் அதிரடியான கதையில் தன்னை நிரூபிக்க வருகிறார் இயக்குனர். படத்தில் காவல் துறையால் வான்டட் ஆக காமிக்கப்படும் தனுஷ் நிஜமாவே வான்டட் ஹீரோ தான்.  தனது வெற்றி படங்களின் மூலம் தமிழ் சினிமா வட்டாரத்தை வாயடைக்க வைக்க காத்திருக்கிறார் இந்த மில்லர்.  யார் மனசுல யாரு ஜெயிக்கப் போவது யாரு என்பதை அடுத்த ஆண்டு காணலாம்.

Also Read: சொன்ன தேதியில் படத்தை வெளியிடாமல் ரசிகர்களை ஏமாற்றும் 5 பெரிய படங்கள்.. விக்ரமை பாடாய்படுத்தும் இயக்குனர்

- Advertisement -

Trending News