2024 Upcoming tamil films: 2024 அதிக பொருட் செலவுடன் முன்னணி நட்சத்திரங்களின் மெகா பட்ஜெட் படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி உள்ளன. காவிய படமாகவும் ஜாலியான படமாகவும் சமூக கருத்தை கொண்டுள்ளதாகவும் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஜனரில் வெளிவந்து ரசிகர்களை குதூகலபடுத்த காத்திருக்கின்றன.
விடாமுயற்சி: துணிவின் வெற்றிக்கு பின் 250 கோடி பட்ஜெட்டில் மகிழ்ந்திருமேனி உடன் விடாமுயற்சியில் இணைந்துள்ளார் அஜித். பல முன்னணி கதாநாயகர்களுடன் மெகா பட்ஜெட்டில் மோதும் அஜித் விடாமுயற்சியின் மூலம் பாக்ஸ் ஆபிஸை நின்று நிதானமாக தட்டி தூக்க இருக்கிறார். விடாமுயற்சியின் அப்டேட்கள் படத்தின் வெற்றியை பாதித்து விடுமோ என்று அனைத்து நிகழ்வுகளையும் ரகசியமாக செய்து வருகின்றனர் படப்பிடிப்பு குழுவினர்.
விஜய் 68: “அனைத்திலும் தி கிரேட்டஸ்ட்” என நிரூபிக்க வரும் விஜய் அவர்கள், வெங்கட் பிரபுவுடன் இணைந்து ஒரு ஜாலியான சயின்ஸ் பிக்சன் மற்றும் டைம் ட்ராவலை அடிப்படையாகக் கொண்டு 300 கோடி செலவில் டிஜிட்டல் டி ஏ ஜி கான்செப்ட் உடன், மேலும் இளமைக்கு திரும்பிய தோற்றத்துடன் ரசிகர்களை கவர வருகிறார்.
Also read: கங்குவாவை அடுத்து கேங்ஸ்டர் ஆக களம் காண உள்ள சூர்யா. பலநூறு கோடி பட்ஜெட்டில் உருவாகும் படம்
கங்குவா: ஹாலிவுட் ரேஞ்சுக்கு இந்திய சினிமாவில் இப்படி ஒரு படம் இதற்கு முன் எடுத்ததில்லை என்னும் அளவுக்கு பல பில்டப் கொடுத்து ரெடியாகி வருகிறது கங்குவா. நீருக்கு அடியில் பல அடி ஆழத்தில் எடுக்கப்படும் சண்டை காட்சிகள் பாகுபலியை மிஞ்சும் பிரம்மாண்டமான போர் என கிட்டத்தட்ட 350 கோடிக்கு மேல் செலவழித்து உள்ளனர் கங்குவா பட குழுவினர்.
இந்தியன் 2: “வணக்கம் இந்தியா, “இந்தியன் இஸ் கம்பேக்” என்று அதே பழைய லஞ்சத்தை ஒழிக்க புதிய அணுகுமுறையுடன் களமிறங்குகிறார் இந்தியன் தாத்தா. அடுத்த ஆண்டு திரைக்கு வரும் இந்தியன் 2 பிரம்மாண்ட முறையில் ரியலிஸ்டிக்காக இருக்க வேண்டும் என்று அமெரிக்கா சென்று கிராபிக்ஸ் வேலைகளில் மும்மூரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கேப்டன் மில்லர்: பொங்கல் ரிலீசுக்கு காத்திருக்கும் கேப்டன் மில்லர் ஆக்ரோஷமான டைம் பீரியட் திரைப்படம் ஆகும். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லரில் தனுஷ் வித்யாசமான கெட்டப்பில் நடித்து வருகிறார். 150 கோடி செலவில் அந்த காலத்திற்கு தகுந்தபடி காட்சிகள் தத்ரூபமாக அமைக்கப்பட்டு இவர்களை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்துள்ளார் இந்த கேப்டன் மில்லர்.
தங்கலான்: இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் தனது அற்புதமான படைப்புகளின் மூலம் சமூகத்திற்கு தரமானதொரு செய்தியை தருவதில் வல்லவர். தற்போது 150 கோடி செலவில் இவர் இயக்கிவரும் தங்கலான் மூலம் பழந்தமிழரின் வலியை உணர்வுபூர்வமாக உணர்த்த வருகிறார்.
இவர் ஏற்கனவே இயக்கிய சார்பட்டா பரம்பரைக்காக நடிகர்களை கடுமையாக மெருகேற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுபோலவே தங்கலானிலும் சில காட்சிகள் இவர் மனதிற்கு திருப்தி தராததால் மீண்டும் மீண்டும் ரீசூட் பண்ண, மாட்டிக் கொண்ட விக்ரமோ பொறுமையுடன் ஒத்துழைப்பு நல்குகிறார்.
Also read: 2024 இல் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 6 படங்கள்.. இந்தியன் 2வுக்கு டப் கொடுக்க வரும் கல்கி