திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

2025 summer சரவெடி தான்! எந்த படம் முதல் 1000 கோடி அடிக்கும்?

இந்த வருடம் நிறைய நல்ல படங்கள் தமிழில் வெளியாகி மக்களிடம் நல்ல விமர்சனத்தையும், அதே நேரத்தில் 100 கோடி box office Club-லும் இணைந்தது.

அதே நேரத்தில் அதிக எதிர்பார்ப்புக்குள்ளான ஒரு சில படங்கள் பெரிய அளவில் ட்ரோல் செய்யவும் பட்டது. இந்த வருடம் நிச்சயம் கோட், கங்குவா போன்ற படங்கள் 1000 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்த்த நிலையில், அது நடக்காமல் போனது.

இப்படி இருக்க, அடுத்த் 2025-லாவது நடக்கும் என்று மக்கள், தயாரிப்பாளர்கள், சினிமா ஆர்வலர்கள் என்று எல்லோரும் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

அடுத்த வருடம் summer-ல் பயங்கரமான படங்கள் எல்லாம் வெளியாகிறது. எல்லா படங்களுமே பெரிய அளவில் ஹைப் உள்ளது.

2025 Summer-ல் வெளியாகும் படங்கள்

அடுத்த வருட summer ஆரம்பிக்கும் மார்ச் மாத இறுதியில் சூர்யா44 படம் வெளியாகவுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்துக்கு இதுவரை பெயர் வைக்கவில்லை.

ஆனால் கார்த்திக் சுப்புராஜ் இயக்கம் என்பதால் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படம் மார்ச் இறுதியில் வெளியாகவுள்ளது.

இதை தொடர்ந்து ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை படம் வெளியாகவுள்ளது.

அந்த படத்தில் நித்யா மேனன் நடித்திருப்பதால், படம் நிச்சயம் திருச்சிற்றம்பலம் vibe தரும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் மே மாதம் சூப்பர்ஸ்டாரின் கூலி படம் வெளியாகிறது.

கூலி படத்துக்கு போட்டியாக அஜித்தின் குட் பேட் அக்லீ படம் வெளியாகிறது. இவர்கள் போட்டி-க்கு நடுவில், SK23 படம் வெளியாகவுள்ளது. இவர்களை தொடர்ந்து summer முடிந்த கையோடு ஜூன் மாதம் கமல் ஹாசன் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும், Thug Life படமும் வெளியாகவுள்ளது.

- Advertisement -

Trending News