Vijay: 2026 தேர்தலை தமிழக மக்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி வருகின்றனர். இதற்கு விஜய்யின் அரசியல் பயணம் ஒரு காரணமாக இருந்தாலும் தற்போதைய ஆட்சியின் மீது இருக்கும் அதிருப்தியும் ஒரு காரணம்.
கடந்த வருடம் கட்சி ஆரம்பித்த விஜய் தற்போது கள அரசியலில் இறங்கியுள்ளார். எப்படியும் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என அவர் கவனத்துடன் ஒவ்வொரு விஷயத்தையும் செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று விடுதலை சிறுத்தை கட்சியிலிருந்து வெளியேறிய ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்துள்ளார்.
இது தெரிந்த கதை தான் என்றாலும் அதிகாரபூர்வமான அறிவிப்புக்கு பிறகு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது.
பதில் சொல்ல காத்திருக்கும் 2026
அதைத்தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா திருமாவளவனை சந்தித்தது தான் ஹாட் டாப்பிக். இதனால் அடுத்த வருட தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைப்பார்கள் என அடித்து சொல்லப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க விஜய் சினிமாவை பொருத்தவரையில் உச்ச நடிகராக இருக்கிறார். அப்படி இருக்கும் போது அதை ஓரம் கட்டி விட்டு அவர் அரசியலுக்கு வந்துள்ளார்.
எப்படியும் ஆட்சியைப் பிடித்து விடுவோம் என்பது அவருடைய நம்பிக்கை. ஆனால் அது அவ்வளவு சுலபம் கிடையாது என்பது அவருக்கும் தெரியும்.
அப்படி ஒரு வேளை ஜெயித்தால் முதல்வர் பதவியை ஏற்பாரா அல்லது திருமாவளவன் போன்ற ஒரு தலைவரிடம் ஒப்படைப்பாரா என்பது தெரியவில்லை.
ஏனென்றால் சர்க்கார் படத்தில் இப்படி ஒரு கிளைமாக்ஸ் இருக்கும். ஒருவேளை ஜெயிக்கவில்லை என்றால் மீண்டும் நடிப்பு பக்கம் திரும்புவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
எது எப்படியோ 2026 தேர்தல் தான் இதற்கான பதில். விஜய் முதல்வர் பதவியை ஏற்பாரா அல்லது எதிர்க்கட்சித் தலைவராக கண்ணில் விரல் விட்டு ஆட்டுவாரா இல்லை சினிமாவில் என்ட்ரி கொடுப்பாரா என்பதை பார்ப்போம்.