வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

இந்த வாரம் ஓடிடியில் படையெடுக்கும் 21 படங்கள்.. மீண்டும் சம்பவம் செய்ய போகும் ஜவான்

November 3 Ott Release Movies: ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் நிறைய படங்கள் படையெடுக்கும் நிலையில் இன்று நவம்பர் மூன்றாம் தேதி கிட்டத்தட்ட 21 படங்கள் வெளியாகிறது. அந்த வகையில் தமிழில் சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ரத்தம் படம் அமேசான் பிரைமில் வெளியாகிறது. அதேபோல் ஆஹா ஓடிடி தளத்தில் தமிழ் குடிமகன் என்ற படம் வெளியாகி இருக்கிறது.

சேரன், ஸ்ரீ பிரியங்கா ஆகியோர் நடிப்பில் இந்த படம் வெளியாகி இருந்தது. சாதி ரீதியான ஒடுக்கு முறையால் ஒரு சமூகம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை உணர்ச்சி பூர்வமாக இந்த படம் காட்டியிருந்தது. இப்படத்தை தியேட்டரில் தவற விட்டவர்களுக்கு நல்ல வாய்ப்பாக ஓடிடியில் வெளியாகுவதால் கண்டிப்பாக ரசிகர்கள் பார்க்கலாம்.

மேலும் அதேபோல் அமேசான் பிரைமில் தான் ஆர்யூஓகே பேபி என்ற படமும் வெளியாகிறது. லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அபிராமி, சமுத்திரகனி ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும் தியேட்டரில் வெளியான ஒரு மாதத்திலேயே இப்போது ஓடிடிக்கு வந்துவிட்டது.

Also Read : அப்படி இப்படின்னு தியேட்டர்ல ஓட்டியாச்சு.. ஓடிடி-யில் ஓட்டுவதற்கு லோகேஷ் வைத்து காய் நகர்த்தும் லலித்

மேலும் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இறுகப்பற்று படம் நவம்பர் 6 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. மேலும் பாலிவுட்டில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த ஜவான் படம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. கிட்டத்தட்ட 1000 கோடியை தாண்டி இந்த படம் வசூல் செய்திருந்தது.

இப்போது ஓடிடியில் ஜவான் படம் வெளியாவதால் மிகுந்த சந்தோஷத்தில் ரசிகர்கள் உள்ளனர். தெலுங்கில் ஸ்கந்தா என்ற படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அதேபோல் நெட்பிளிக்ஸில் மேட் என்ற படமும், ஆஹா ஓடிடியில் மந்த் ஆப் மது என்ற படமும் ஒளிபரப்பாகிறது. ஹிந்தியில் அமேசான் பிரைம் ஓடிடியில் பிஜமீனா என்ற தொடர் வெளியாகிறது.

இது தவிர ஹாட்ஸ்டாரில் ஆர்யா சீசன் 3 என்ற ஹிந்தி தொடர் வெளியாகியது. மேலும் ஆங்கிலத்தில் லாக்ட் இன் என்ற படம் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. அதேபோல் இன்சிடியஸ் தி ரெட் டோர் படமும் இதே ஓடிடி தளத்தில் தான் இன்று வெளியாகி இருக்கிறது. ஆகையால் இந்த வாரம் எக்கச்சக்க படங்கள் ஓடிடியில் படையெடுத்து ரசிகர்களை மகிழ்விக்க வந்திருக்கிறது.

Also Read : சித்தாவை பல கோடி கொடுத்து வாங்கிய விஜய் டிவி.. ஓடிடியில் கல்லா கட்ட ரிலீஸ் எப்போது தெரியுமா?

Trending News