திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

23 வருட திருமண வாழ்க்கையை இப்படியா கொச்சைப்படுத்துவது.. ட்விட்டரில் நாரடித்த குஷ்பூ

அரசியல், நடிப்பு என செம பிசியாக இருக்கும் குஷ்பூ சோசியல் மீடியாவிலும் ரொம்பவே ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இவர் 80, 90களில் தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி போட்டு பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.

அதன் பிறகு கடந்த 2000 ஆம் ஆண்டில் நடிகரும் இயக்குனருமான சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சுந்தர் சி இயக்கம், நடிப்பு எனவும் குஷ்பூ நடிப்பு, அரசியல் எனவும் பிசியாக இருந்து வருகிறார்.

Also Read: ஒரே வருடத்தில் 10 படங்களில் நடித்த குஷ்பூ.. எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட்டச்சே

மேலும் இவர் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும் பதவி வகிக்கிறார். இந்நிலையில் அவ்வபோது குஷ்பூவை குறித்து சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி வருகிறது. அதிலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு குஷ்பூ, சுந்தர்சியை திருமணம் செய்து கொள்வதற்காக மதம் மாறினார் என்ற தகவல் வைரலாகப் பரவியது.

இதற்கு குஷ்பூ தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக விளக்கமளித்துள்ளார். என்னுடைய திருமணத்தை பற்றி விமர்சிப்பவர்கள் கொஞ்சமாவது அறிவு பெற்றுக் கொள்ளுங்கள். அது கொஞ்சம் கூட இல்லாததால் தான் என்னுடைய 23 வருட திருமண வாழ்க்கையை கொச்சைப்படுத்தி இருக்கிறீர்கள். நீங்கள் எல்லாம் நம் நாட்டில் இருக்கும் சிறப்பு திருமண சட்டம் பற்றி கேள்விப்பட்டதே இல்லை என்று நினைக்கிறேன்.

Also Read: 8 வயதில் இருந்து தந்தையால் சித்திரவதை அனுபவித்த குஷ்பூ.. பப்ளிசிட்டிக்காக பேசுவதாக வம்பு இழுத்த பிரபலம்

நான் மதம் மாறவும் இல்லை. அப்படி மாற வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. எனது 23 வருட திருமண வாழ்க்கை நம்பிக்கை, மரியாதை, சமத்துவம் மற்றும் அன்பின் அடிப்படையில் உறுதியானது. இதற்கு மேலும் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் தயவு செய்து மலை ஏறவும். உங்களுக்கு இது தேவையா! என்று கூறியுள்ளார்.

இந்த ட்விட்டர் பதிப்பு தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகிறது. அது மட்டுமல்ல சாதாரண விஷயத்திற்கு குஷ்பூ எதற்காக இவ்வளவு டென்ஷன் ஆகிறார், ஒரு வேலை முழு நேர அரசியல்வாதியாக மாறிவிட்டதால் இப்படி ஒரு ரியாக்ஷன் கொடுக்கிறாரோ! என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்கின்றனர்.

Also Read: வருஷம் ஆக ஆக வயது குறையும் குஷ்புவின் புகைப்படம்.. ஏர்போர்ட்டில் அசந்து பார்த்த ஏரோஸ்டர்ஸ்

Trending News