வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

24 மணி நேரமும் தம்மு தான்.. மாமியின் மார்க்கெட் போக இது தான் காரணம்

சினிமாவில் உள்ள நடிகைகள் பார்ட்டி, பப் என்று செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஒரு சில நடிகைகள் இதற்கு விதிவிலக்காகவும் உள்ளனர். மேலும் சில நடிகைகள் எல்லை மீறி குடித்து நடு ரோட்டிலேயே கிடந்த செய்திகளும் வெளியாகி இருக்கிறது. இவ்வாறு போதைக்கு அடிமையாக நடிகைகள் உள்ளனர்.

ஆனால் பிரபல நடிகை 24 மணி நேரமும் தம்மடிக்கும் பழக்கம் உடையவராம். முதல் படமே மிகப்பெரிய ஹிட் கொடுத்த அந்த மாமி நடிகை பார்ப்பதற்கு குடும்ப குத்து விளக்கு போல் இருப்பார். மேலும் அடுத்த அடுத்த பட வாய்ப்புகள் டாப் நடிகர்களுடன் கிடைக்க ஆரம்பித்தது.

Also Read : 2வது திருமணத்திற்கு தயாரான நடிகை.. கவர்ச்சியில் கிறங்கிப் போன தொழிலதிபர்

கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வருவார் என எதிர்பார்த்த நிலையில் திடீரென அவரது மார்க்கெட் சரிந்து விட்டது. இதற்குக் காரணம் அவரின் தம்மடிக்கும் பழக்கம் தான் என்று கூறப்படுகிறது. பொதுவாக மது பழக்கம் இருந்தால் கூட இரவு நேரம் மட்டும்தான் இருக்கும். ஆனால் நடிகை பொழுதா பொழுதுக்கும் தம்மடிப்பதால் ஹீரோக்கள் அவர் உடன் நெருங்கி நடிக்க சங்கோஜப் பட்டுள்ளனர்.

இதனால் அந்த நடிகையின் படம் என்றாலே முன்னணி ஹீரோக்கள் தெறித்து ஓட ஆரம்பித்து விட்டனர். ஒரு கட்டத்திற்கு மேல் பட வாய்ப்பு இல்லாததால் கிடைக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். அதன் பின்பு சினிமாவே வேண்டாம் என வெளிநாட்டில் பிசினஸ் செய்து வந்தார்.

அதிலும் சமீபத்தில் பிரச்சனை ஏற்பட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறாராம் மாமி நடிகை. ஒருவேளை அவருக்கு தம்மடிக்கும் பழக்கம் மட்டும் இல்லை என்றால் தற்போது முன்னணி நடிகைகளின் பட்டியலில் அந்த நடிகையும் இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Also Read : நடிகை மீது பைத்தியமாக இருந்த ஹீரோ.. சுயரூபத்தை காட்ட அப்பா செய்த மட்டமான வேலை

Trending News