ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பிரபல நடிகரிடம் சிகிச்சைக்காக 25 கோடி கடன் வாங்கினேனா.? அவசர அவசரமாக சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சமந்தா

Actress Samantha Controversy: தமிழிலும் தெலுங்கிலும் ரவுண்டு கட்டிங் நடித்துக் கொண்டிருந்த சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டா. ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றுவிட்டனர்.

விவாகரத்திற்கு பிறகு செம போல்டாக நடித்துக் கொண்டிருந்த சமந்தாவிற்கு கண் திருஷ்டி பட்டது போல் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். நோய் தொற்றின் தாக்கத்தினால் அவதிப்பட்ட சமந்தா இப்போது தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: ரசிகர்களால் கடவுளாக பார்க்கப்பட்டு கோவில் கட்டப்பட்ட 6 நடிகைகள்.. குஷ்பூவால் ஆரம்பித்த மட்டமான வேலை

இதனால் குணமடைந்து மீண்டும் சினிமாவுக்கு வருகிறேன் என்று ஒரு வருட இடைவெளி எடுத்துக் கொண்டார். இவர் நிறைய படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கியதால் அவற்றை எல்லாம் திருப்பிக் கொடுத்து விட்டார். அதுமட்டுமல்ல தனது சிகிச்சைக்காக ரூபாய் 25 கோடியை பிரபல நடிகர் இடம் வாங்கியதாக சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது.

இதற்கு சமந்தா அதிரடியாக பதிலடி கொடுத்து வதந்திக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ‘மயோசிடிஸ் சிகிச்சைக்கு 25 கோடி தேவைப்படும் என்று தவறான தகவலை பரப்பாதீர்கள். சிறிய தொகையை தான் நான் என்னுடைய சிகிச்சைக்காக செலவு செய்கிறேன்.

Also Read: சமந்தாவின் மடியில் அமர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்ட குரங்கு.. காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்

இப்பொழுது இந்த நோயால் இன்னும் நிறைய பேர் பாதிப்படைந்துள்ளனர். சிகிச்சை தொடர்பான செய்திகளை வெளியிடும்போது சற்று பொறுப்புடன் இருங்கள். அது மட்டுமல்ல 25 கோடியை நான் கடன் வாங்கியதாக சொல்லப்படுகிறது.

எதற்காக நான் கடன் வாங்க வேண்டும், சினிமாவில் நடித்து அதிக அளவில் சம்பாதித்து சேர்த்து வைத்திருக்கிறேன். யாரிடமும் கடன் வாங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை, என்னால் என்னை பார்த்துக் கொள்ள முடியும்.’ என்ற பதிவை வெளியிட்டு வதந்தியை பரப்பியவர்களுக்கு சமந்தா வாய் பூட்டு போட்டு இருக்கிறார்.

Also Read: 5 டாப் நடிகர் நடிகைகள் சீக்ரெட்டாக குத்திய டாட்டூஸ்.. கணவரின் பெயரை பச்சை குத்திய சமந்தா

Trending News