திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

100 கோடி வசூலை குவித்த மாநாடு.. சிம்பு வேற லெவல் கம்பேக்

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த மாதம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மாநாடு. இந்த படம் அந்த படத்தில் பணியாற்றிய எல்லோருக்குமே நல்ல லாபத்தையும் சினிமாவில் நல்ல வளர்ச்சியையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அதுவும் குறிப்பாக சிம்பு மற்றும் வெங்கட் பிரபுவுக்கு. இருவருமே கடந்த பத்து வருடங்களாக சொல்லிக்கொள்ளும்படி வெற்றிப்படங்கள் எதுவும் கொடுக்கவில்லை. 10 வருட தாகத்தை மொத்தமாக தீர்த்து வைத்து விட்டது மாநாடு திரைப்படம்.

அதுமட்டுமில்லாமல் ஹாலிவுட் ஸ்டைல் கதையை தமிழ் ரசிகர்கள் ஈஸியாகப் புரிந்து கொள்ளும்படி எடுத்தது தான் இந்த படத்தின் வெற்றி எனக் கொண்டாடுகின்றனர். அதுமட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் மாநாடு படம் உச்சத்தை தொட்டுள்ளது.

முன்னரெல்லாம் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்றோரின் படங்கள்தான் 100 கோடி வசூலை அடையமுடியும் என ஒரு கருத்துக்கணிப்பு இருந்த நிலையில் தற்போது படமும் கதையும் நன்றாக இருந்தால் எந்த நடிகர் வேண்டுமானாலும் 100 கோடி வசூல் செய்யலாம் என்பது தொடர்ந்து நிரூபணமாகி வருகிறது.

கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் 100 கோடி வசூலை கொடுத்த நிலையில் அதனைத் தொடர்ந்து வெளியான சிம்புவின் மாநாடு திரைப்படமும் 100 கோடி வசூலை நெருங்கி விட்டதாக கூறுகின்றனர்.

ஏற்கனவே உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 97 கோடிக்கு மேல் வசூல் செய்து விட்ட நிலையில் இந்த வார விடுமுறை நாட்களில் கண்டிப்பாக 100 கோடியைத் தொட்டுவிடும் என்றே கூறுகின்றனர். சிம்புவுக்கு இப்படி ஒரு வெற்றி படமாக அமையும் என அவரே நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார் என கோலிவுட் வட்டாரங்களில் சிலாகிக்கிறார்கள்.

Trending News