உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு உடனடியாக தன்னுடைய அடுத்த படத்துக்கான வேலைகளில் இறங்கிவிட்டார். அந்தவகையில் அடுத்ததாக தொடர்ந்து மூன்று படங்கள் உருவாக உள்ளது.
சமீபகாலமாக உதயநிதி ஸ்டாலினின் யதார்த்தமான நடிப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அந்த வகையில் நிமிர், சைக்கோ, கண்ணே கலைமானே திரைப்படங்கள் விமர்சக ரீதியாக நல்லதொரு கருத்தை பெற்றது.
இந்நிலையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நண்பர் அருண்ராஜ் காமராஜா இயக்கத்தில் இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த ஆர்டிகல் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கருப்பன் பட நாயகி தன்யா ரவிச்சந்திரன் என்பவர் நடிக்க உள்ளதாக செய்திகள் வந்தது.
அதனைத் தொடர்ந்து ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் டாக்டர் ராஜசேகரின் மகள் ஷிவானி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.
தெலுங்கில் பிரபலமாக இருக்கும் இவர் தமிழில் நடிக்கும் முதல் படமாக ஆர்டிகல் 15 ரீமேக் இடம் பெற்றுள்ளது. இந்த படம் வெளியான பிறகு தனக்கு தமிழில் நிறைய படவாய்ப்புகள் கிடைக்கும் என நம்புகிறாராம்.
