செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஷங்கருக்காக காத்திருக்கும் 25 வயது நடிகை.. போனாப் போகுது, அந்த பட வாய்ப்பை கொடுத்துருங்க சார்!

இந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் ஷங்கர் பட வாய்ப்பு கிடைக்காதா என்ற 25 வயது நடிகை தேடி வரும் வாய்ப்புகளை தவிர்த்துவிட்டு காத்துக் கொண்டிருக்கும் செய்தி தான் தற்போது பரபரப்பாகியுள்ளது.

இந்தியன் 2 பட பிரச்சனைகளுக்கு பிறகு தற்போது சங்கர் பாலிவுட்டில் ஒரு படம், தெலுங்கில் ஒரு படம் என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகி பிஸியாகி கொண்டிருக்கின்றார். அதில் முதலில் சங்கர் ராம் சரணை வைத்து ஒரு படத்தை எடுக்க உள்ளார்.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. எப்படியாவது இந்த பட வாய்ப்பை வாங்கிவிட வேண்டும் என தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ரஷ்மிகா மந்தனா தனக்கு வரும் மற்ற படங்களில் வாய்ப்பு ஒதுக்கிவிட்டு காத்துக் கொண்டிருக்கிறாராம்.

ஷங்கர் படம் என்றாலே கண்டிப்பாக நடிகைகளுக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் இருக்கும் எனவும், அவர் படங்களில் நடித்தால் கண்டிப்பாக நமக்கு உலக அளவில் ரீச் கிடைக்கும் எனவும் பெரிதும் நம்பி கொண்டிருக்கிறாராம்.

இதன் காரணமாக ரஷ்மிகா மந்தனா அவரை நடிக்க வைக்கலாமா என பேச்சுவார்த்தை நடக்கும் போதே எப்படியோ அந்த விஷயத்தை மோப்பம் பிடித்து சங்கர் படம் வாய்ப்பை பிடித்தே ஆகவேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார் ரஷ்மிகா.

ஷங்கர் படங்களில் எப்போதுமே கவர்ச்சி தூக்கலாக இருக்கும். அதேபோல் ரஷ்மிகா மந்தனாவும் கவர்ச்சிக்கு எந்த தடையும் விதித்தது இல்லை என்பதால் கண்டிப்பாக சங்கர் பட வாய்ப்பு கிடைத்துவிடும் என்கிறார்கள்.

rashmika-mandanna-cinemapettai
rashmika-mandanna-cinemapettai

Trending News