தனுஷ் கூட ஆரம்ப காலகட்டங்களில் நடித்த 26 வயது நடிகை ஒருவர் மீண்டும் அவருடன் படம் நடிக்க தயங்குவதாக கோலிவுட் வட்டாரங்களில் ஒரு செய்தி வெளிவந்துள்ளது. அதற்கெல்லாம் காரணம் ஒரு ரொமான்ஸ் பஞ்சாயத்து தானாம்.
தனுஷுடன் படம் நடிக்க பல நடிகர் நடிகைகள் ஆர்வமாக இருக்கின்றனர். அதுவும் குறிப்பாக இன்றைய இளம் நடிகைகள் பலரும் தனுஷுடன் நடித்தால் தங்களுடைய மார்க்கெட் இன்னும் உச்சத்திற்கு செல்லும் என நினைக்கின்றனர்.
அதுமட்டுமில்லாமல் தனுஷிடம் வழியே போய் வாய்ப்பு கேட்கும் நடிகைகளும் பலர் இருக்கின்றனர். இப்படி ஒரு பக்கம் இருக்கையில் தனுசுடன் ஒரே ஒரு படம் நடித்து விட்டு இனிமேல் அவருடன் நடிக்க மாட்டேன் என அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார் 26 வயது நடிகை.
அப்படி என்ன செய்தார் தனுஷ்? தனுஷ் மற்றும் சற்குணம் கூட்டணியில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்ற திரைப்படம் நய்யாண்டி. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக முதல் முறையாக நஸ்ரியா நடித்திருந்தார்.
கலகலப்பான படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ரொமான்ஸ் பாடல் காட்சி ஒன்று இடம்பெற்றது. அதில் நஸ்ரியாவின் இடுப்பை தனுஷ் தடவுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. ஆனால் அதில் நடித்தது உண்மையில் நஸ்ரியா இல்லை. நஸ்ரியாவிடம் சொல்லாமல் இயக்குனர் சற்குணம் டூப் போட்டு எடுத்துள்ளார்.
இது படம் வெளியான பின்னர் பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் நஸ்ரியா படக்குழுவினர் மீது அதிருப்தி தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. படக்குழு செஞ்ச தப்புக்கு தனுஷ் என்ன செய்வார் என்று யோசிக்கலாம்.
ஆனால் இவ்வளவு பெரிய பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் போது எனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல ஒதுங்கிக் கொண்டாராம் தனுஷ். இதுவே நஸ்ரியாவின் கோபத்துக்கு காரணம் எனவும் கூறுகின்றனர். இதன் காரணமாகவே தனுஷ் படங்களில் இனி நடிக்க மாட்டேன் என பிடிவாதமாக இருக்கிறாராம்.