நடிச்சு கிழிச்சது போதும், இனியாவது சொல்றதை கேளு.. 27 வயது நடிகையை கட்டாயப்படுத்தும் பெற்றோர்

actress-gossip
actress-gossip

ஆரம்பத்தில் முன்னணி நடிகை ரேஞ்சுக்கு சில படங்களிலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்று பின்னர் சரியான படங்கள் அமையாததால் முற்றிலும் பட வாய்ப்புகளை இழந்து கடந்த சில வருடங்களாக ஒரு படங்கள் கூட கிடைக்காமல் தடுமாறி வருபவர் தான் அந்த 27 வயது நடிகை.

அக்கட தேசத்தைச் சேர்ந்த அந்த நடிகை தமிழில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே வலம் வருகிறார். ஆனால் அவருடைய தாய் மொழியில் பட வாய்ப்பு பெறுவதற்காக பலான புகைப்படங்கள் நிறைய எடுத்து பல தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி உள்ளாராம்.

ஆரம்பத்தில் அப்படி இப்படி படவாய்ப்பு வாங்கிக்கொண்டிருந்த அந்த நடிகைக்கு தமிழ் சினிமாவின் தற்போதைய இளம் சென்சேஷனல் நடிகருடன் ஒரு சங்கப் படத்தில் இணைந்தார். யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த படம் கோடிக்கணக்கில் வசூல் செய்து சரித்திர சாதனை படைத்தது.

அதுமட்டுமில்லாமல் முதல் படமே அந்த நடிகைக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொடுத்து விட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் சில படங்களில் அதே நடிகருடன் தொடர்ந்தார். இருவரும் இணைந்த படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் மற்ற இளம் நடிகர்களுடன் நடிக்க தொடங்கினார் அந்த நாயகி.

இங்குதான் விதி விளையாடியது. அந்த டிவி நடிகரின் படங்களை தவிர வேறு எந்த படமும் இந்த நாயகிக்கு கைகொடுக்காத நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக மார்க்கெட்டை இழந்து தற்போது ஒரு படம் கூட இல்லாமல் கடந்த சில வருடங்களாக சொந்த ஊரில் தலைமறைவானார். இந்நிலையில் மீண்டும் பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக பல நடிகைகளும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில் இந்த நடிகையை மட்டும் எந்த மேக்கப்பும் போடாமல் அழகான ஹோம்லியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார்.

இதனால் தற்போது மீண்டும் தமிழில் ஒரு சில பட வாய்ப்புகள் கிடைத்துள்ளதாம். இந்த நேரத்தில் அந்த நடிகையின் குடும்பத்தினர் தயவுசெய்து திருமணம் செய்துகொள்ளுமாறு அந்த நடிகையை வற்புறுத்தி வருகிறார்களாம். கடந்த சில வருடங்களாக படவாய்ப்பு இல்லாமல் இருந்த நடிகையை எப்படியாவது மனதை மாற்றி திருமணம் செய்து வைத்து விடலாம் என நினைத்திருந்த பெற்றோரின் கனவில் மண்ணைப் போட்டு விட்டு தற்போது நம்ம ஊர் பக்கம் டேரா போட்டு விட்டாராம்.

திருமணத்திற்கு பிறகு நடிக்க வந்தால் அது விவாகரத்தில் போய் தான் முடியும் என்பதால் அந்த நடிகை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என பெற்றோரிடம் கூறி விட்டாராம். இருந்தாலும் அவர்கள் விடுவதாகத் தெரியவில்லை. அடுத்த பிளைட் ஏறி வந்து அம்மணியை கடத்தி சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

Advertisement Amazon Prime Banner