வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஜோதிகா எல்லாம் வேண்டாம், 28 வயது நடிகையை புக் செய்த வெங்கட் பிரபு.. தளபதி 68ல் இணைந்த ஹீரோயின்

Thalapathy 68: லியோ படம் வருகின்ற அக்டோபர் மாதம் ரிலீஸாக உள்ள நிலையில் ரசிகர்கள் தளபதி 68 படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக வைத்துள்ளனர். காரணம் வெங்கட் பிரபு மற்றும் விஜய் இருவரும் முதல்முறையாக இணைந்துள்ளதால் இந்த படம் எப்படி இருக்கும் என்ற யோசனை ஏற்பட்டு இருக்கிறது. ஏற்கனவே அஜித்துக்கு மங்காத்தா என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை வெங்கட் பிரபு கொடுத்திருக்கிறார்.

ஆனால் அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான கஸ்டடி படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. ஆனாலும் விஜய், வெங்கட் பிரபுவுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இந்த படத்தின் கதை தயாரான நிலையில் நடிகர் மற்றும் நடிகைகளை படக்குழு தேர்வு செய்து வருவதில் மும்மரம் காட்டி வருகிறார்கள்.

Also Read : சஸ்பென்சை உடைக்க இதுதான் காரணம்.. லியோவில் கிளைமாக்ஸ் காட்சி இவ்வளவு நேரமா? பறக்க போகும் விசில் சத்தம்

ஏனென்றால் லியோ படம் வெளியான உடனே தளபதி 68 படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. குஷி படத்திற்கு பிறகு நீண்ட வருடங்கள் கழித்து மீண்டும் இந்த கூட்டணி இணைவதாக இணையத்தில் காட்டு தீயாய் தகவல் பரவியது.

மேலும் ஜோதிகா சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த நிலையில் கதாநாயகி முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் தான் நடித்து வருகிறார். மேலும் விஜய்க்கு இப்போது ஜோதிகா செட்டாவாரா என்ற கேள்வியும் இருந்த நிலையில் 28 வயது நடிகையை தளபதிக்கு ஜோடியாக நடிக்க வைக்க உள்ளாராம் வெங்கட் பிரபு. சிவகார்த்திகேயனுடன் அடுத்தடுத்து கூட்டணி போட்டு பிரபலமடைந்தவர் தான் பிரியங்கா அருள் மோகன்.

Also Read : அஜித்துடன் கூட்டணி சேரும் தனுஷ்.. லியோ, ஜெயிலர் வசூலை முறியடிக்க போகும் பிரம்மாண்ட கூட்டணி

இப்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் படத்தில் கூட நடித்து இருக்கிறார். இப்போது இவருக்கு எக்கச்சக்க பட வாய்ப்பு வந்து கொண இருக்கும் நிலையில் முதல் முறையாக விஜய்யுடன் ஜோடி போடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதற்கு கண்டிப்பாக பிரியங்கா மோகன் மறுப்பு தெரிவிக்க மாட்டார்.

ஆகையால் தளபதி 68 கூட்டணி கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது. அதோடு மட்டுமல்லாமல் பிரியங்கா மோகன் மற்றும் விஜய்க்கு கிட்டத்தட்ட 21 வயது வித்தியாசம். ஆனாலும் தற்போதும் இளமையாக இருக்கும் விஜய்க்கு பக்காவாக பிரியங்கா செட்டாகுவார். மேலும் விரைவில் இந்த படம் குறித்து அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Also Read : விஜய்க்கு ஜால்ரா தட்டிய சரத்குமார்.. மேடையிலேயே நோஸ்கட் கொடுத்த சத்யராஜ்

Trending News