வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

சர்ச்சையை கிளப்பிய ராஜாவின் மோசமான பேச்சி.. பதிலடி கொடுத்த எடப்பாடியார்

வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திமுக சார்பில் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த ஆ. ராசா கூட்டம் ஒன்றில் பேசும் போது,

முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை தரம் தாழ்த்தும் வகையில், ஸ்டாலினின் செருப்புக்கு ஒப்பிட்டுப் பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். ஏனென்றால் வெல்ல மண்டியில் வேலை பார்த்து வந்த எடப்பாடி பழனிசாமி,

ஸ்டாலின் அணிந்துள்ள செருப்பின் விலையை விட மதிப்பு குறைந்தவர் என்றும், அவர் ஸ்டாலினுக்கு போட்டியாக மாற முடியுமா? என்ற கருத்தை பதிவிட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளார்.

EPS vs raja
EPS vs raja

ஏற்கனவே ரூ. 1,76,000 கோடி 2ஜி ஊழல் தொடர்பான வழக்கில் ஆ. ராசா கைது செய்தபோது, பெரிதும் விமர்சனத்திற்கு ஆளானார்.

தற்போது திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்துகொண்டே சமூகநீதியை காற்றில் பறக்க விடும் அளவுக்கு இப்படியெல்லாம் பேசுவது பலர் தரப்பிலிருந்தும் கண்டனம் எழத் தொடங்கியுள்ளது.

இவருடைய இந்த பேச்சுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள், ‘நாங்கள் ஏழைகள் அப்படித்தான் இருப்போம்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Trending News