செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அப்பா பெயரை காப்பாற்ற வரும் 2வது வாரிசு.. குடும்பப் பெயரை கெடுத்த மூத்த நடிகர்

சினிமாவில் தற்போது வாரிசு நடிகர்களின் வருகை அதிகமாக உள்ளது. ஏனென்றால் அவர்கள் பிறந்ததிலிருந்தே திரைத்துறை சார்ந்த விஷயங்களை பார்த்து வளர்ந்து வருவதால் சினிமா மீது ஈடுபாடு அதிகமாக உள்ளது. அவ்வாறு பிரபல நடிகர் ஒருவரின் மூத்த மகன் சினிமாவில் நுழைந்தார்.

ஆரம்பத்தில் ஒன்னும் தெரியாத அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு வந்த இவர் தந்தையின் பெயரை கெடுக்கும் அளவிற்கு பல சர்ச்சையில் சிக்கினார். ஷூட்டிங் ஸ்பாட்டில் சரியான நேரத்திற்கு வருவதில்லை என பல குற்றச்சாட்டுகள் இவர் மீது தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது.

Also Read :விவாகரத்துக்கு பிறகும் கணவரை நினைத்து ஏங்கும் நடிகை.. இப்ப வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்

அதுமட்டுமன்றி சூட்டிங் ஸ்பாட்டுக்கு குடுத்துவிட்டு வருவது, பெண்களுடன் ஊர் சுத்துவது என இந்த நடிகரின் செய்கை எல்லை மீறிப் போய்க் கொண்டிருந்தது. அப்பேர்ப்பட்ட அப்பாவுக்கு பிறந்த மகனா இவர் என்பது போல பார்த்த எல்லோரும் இவரை திட்டாத குறை தான்.

ஆனால் இந்த நடிகருக்கு படம் ஓடாவிட்டாலும் பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் குடும்ப மானத்தைக் கெடுத்த இந்த நடிகரின் தம்பி தற்போது சினிமாவில் நுழைந்துள்ளார். ஒரு பெரிய இயக்குனரின் படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளார்.

Also Read :விவாகரத்து லிஸ்டில் இணைந்த பிரபல தொகுப்பாளினி.. எல்லாம் சேனலோட ராசி, ஐயோ போச்சே!

மேலும் சினிமாவில் வருவதற்கு முன்பே இந்த நடிகர் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டார். இந்த நடிகர் தந்தையின் பெயரை காப்பாற்றுவார் என பலரும் கூறி வருகின்றனர். ஏனென்றால் அண்ணனுக்கு அப்படியே நேரெதிரான குணாதிசயங்கள் கொண்டவராம் இவர்.

ஏனென்றால் தனது அப்பா போல எளிமையாக எல்லார் கூடவும் பழகக்கூடியவராம். இவர் தனது கடின உழைப்பால் கண்டிப்பாக தனது தந்தையின் பெயரை காப்பாற்றுவது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் தனக்கான பெயரை எடுப்பார் என எதிர்பார்க்கலாம்.

Also Read :12 லட்சம் பேரம் பேசி படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர்.. வெளிப்படையாக கதறிய நடிகை

Trending News