புதன்கிழமை, ஜனவரி 22, 2025

கணவன் இறந்த ஒரு வருடத்திலேயே 2வது திருமணமா? அந்த தொந்தரவு தாங்காமல் மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 80 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறியவர்தான் கண்ணழகி மீனா. ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்திருக்கும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இப்போதும் கூட அவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் 46 வயதாகும் மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருக்கிறாராம். கடந்த 2009 ஆம் ஆண்டு இவர் பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார்.

Also read: அஜித், விஜய் சூப்பர் ஹிட் படத்தை தவறவிட்ட மீனா.. பல வருடங்களுக்குப் பின் வருந்திய சம்பவம்

இவரும் குழந்தை நட்சத்திரமாக விஜய்யின் தெறி திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படி குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த மீனா தன் கணவரின் இறப்பால் பொதுவெளியில் வருவதையே தவிர்த்து வந்தார். கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி மீனாவின் கணவர் நுரையீரல் செயலிழப்பின் காரணமாக மரணமடைந்தார்.

இந்த அதிர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாத மீனா இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறார். அவருடைய நண்பர்கள் தான் அவருக்கு முழு ஆதரவாக இருந்து வருகிறார்கள். இந்நிலையில் அவருடைய மகளின் எதிர்காலத்தை காரணம் காட்டி மீனாவின் நெருங்கிய உறவுகள் அவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி இருக்கிறார்கள்.

Also read: 6 மாதங்களாக காத்திருந்தேன்.. கணவர் இறந்த பிறகு மீனா எடுத்த அதிரடி முடிவு

ஆனால் முடியவே முடியாது என்று மீனா தொடர்ந்து மறுத்து வந்திருக்கிறார். இருப்பினும் அவருடைய மனதை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிய அவருடைய குடும்பத்தினர் தற்போது அவருக்கு இரண்டாவது திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்களாம். மீனாவும் தற்போது இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.

விரைவில் அவர் தன்னுடைய குடும்ப நண்பர் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக ஒரு தகவல் காட்டு தீ போல் பரவி வருகிறது. ஆனால் இந்த விஷயம் குறித்த எந்த ஒரு விளக்கத்தையும் மீனாவின் தரப்பிலிருந்து யாரும் தரவில்லை. கூடிய விரைவில் இந்த தகவல் உண்மையா, பொய்யா என்று தெரிய வரும். இருப்பினும் கணவர் இருந்து ஒரு வருடம் முடிவதற்குள்ளாகவே மீனா பற்றி வந்திருக்கும் இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.

Also read: மனவலியுடன் மீனா போட்ட பதிவு.. இந்த மாதிரியா செய்வீங்க!

Trending News