ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ஒரே படத்தில் நடித்து இறந்து போன 3 நடிகர்கள்.. அதிர்ச்சியில் விஷ்ணு விஷால்

நடிகர் விஷ்ணு விஷாலுக்கு நடுவில் படங்கள் எதுவும் சரியாக போகாமல் இருந்த நிலையில் சமீபத்தில் வெளியான கட்டா குஸ்தி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதுமட்டும்இன்றி இந்த படம் வசூலையும் வாரி குவித்தது. இப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கம் லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவருடன் விக்ராந்த்தும் நடிக்க உள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக லால் சலாம் படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாராம். விஷ்ணு விஷாலுக்கு தொடர்ந்து அதிர்ஷ்டம் கொட்டுகிறது. இப்படி போய்க்கொண்டிருக்கும் சூழ்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் விஷ்ணு விஷால் ஒரு படத்தில் நடித்த பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

Also Read : விஷ்ணு விஷாலுக்கு திருப்புமுனையாக அமைந்த 5 படங்கள்.. சரியான கம்பேக் கொடுத்த ராட்சசன்

இது விஷ்ணு விஷாலுக்கு மட்டுமின்றி அனைவருக்குமே ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. அதாவது விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடி குழு படம் இவருக்கு மிகவும் திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படத்தில் புரோட்டா சூரி காமெடி இப்போது வரை ரசிகர்களால் மறக்க முடியாத காமெடியாக உள்ளது.

மேலும் வெண்ணிலா கபடி குழு மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய வெற்றியை தந்தது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், சூரி, அப்புகுட்டி, நித்திஷ் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இதில் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் நித்திஷ் வீரா உயிரிழந்தார்.

Also Read : விஷ்ணு விஷாலை பிடித்து ஆட்டும் நம்பர் சென்டிமென்ட்.. முதல் மனைவியை கழட்டி விட்டது இதுக்கு தானா

இவரைத் தொடர்ந்து உடல்நிலை குறைவால் சிகிச்சை பெற்று வந்த ஹரி வைரவன் அண்மையில் உயிரிழந்தார். இது வெண்ணிலா படக்குழுவினருக்கு மிகுந்த அதிர்ச்சியை கொடுத்தது. இப்போது இவரைத் தொடர்ந்து இதே படத்தில் நடித்த மாயி சுந்தர் இன்று உயிரிழந்துள்ளார்.

50 வயது நிரம்பிய இவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலனளிக்காமல் காலமானார். இவ்வாறு வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் ஒவ்வொருவராக மரணித்துள்ளனர். இது விஷ்ணு விஷாலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read : 2வது பொண்டாட்டி வந்த நேரம்.. விஷ்ணு விஷால் லயன் அப்பில் இத்தனை படங்களா?

- Advertisement -

Trending News