சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ஆடுகளம் படத்தில் டப்பிங் குரல் கொடுத்த 3 பிரபலங்கள்.. அட! இந்த வில்லங்கமான நடிகரும் இருக்காரே

வெற்றிமாறன் மற்றும் தனுஷ் வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படம் ஆடுகளம். இப்படம் பல தேசிய விருதுகளை பெற்று சாதனை படைத்தது. இதன் மூலம் தான் தனுஷின் சினிமா வாழ்க்கையே மாறியது என்று கூட கூறலாம்.

ஆனால் இப்படத்தில் நடித்த 3 முக்கிய நடிகர்களுக்கு 3 துறையைச் சேர்ந்தவர்கள் டப்பிங் குரல் கொடுத்துள்ளனர் யார் யார் என்னென்ன நடிகர்களுக்கு குரல் கொடுத்துள்ளார்கள் என்பதை பார்ப்போம்.

ஆடுகளம் படத்தில் பேட்டைக்காரன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜெயபாலனுக்கு நடிகர் ராதாரவி தான் குரல் கொடுத்துள்ளார். ஆனால் ராதாரவி தான் குரல் கொடுத்தார் என்றால் நம்ப முடியாது. அந்தஅளவிற்கு ரசிகர்கள் யாரும் குரலை கண்டுபிடிக்காதமாதிரி வெற்றிமாறன் பயன்படுத்திருப்பார்.

radha-ravi-samuthirakani-andrea
radha-ravi-samuthirakani-andrea

துறை அண்ணனாக நடித்திருக்கும் கிஷோருக்கு நம்ம இயக்குனர் சமுத்திரகனி டப்பிங் குரல் கொடுத்திருப்பார். இதிலிருந்துதான் சமுத்திரக்கனிக்கு, வெற்றிமாறனுக்குக்கும் இடையே நட்பு உருவாக காரணமாக இருந்துள்ளது.

இதுதான் இவர்களது கூட்டணிக்கு தொடக்கம் ஆகவே இருந்துள்ளது. இவ்வளவு ஏன் படத்தின் நாயகியான டாப்ஸிக்கு தமிழ் வராது என்பதால் ஆண்ட்ரியா குரல் கொடுத்திருக்கிறார்.

இந்த மூன்று முக்கிய நடிகர்களுக்கும் மூன்று துறையைச் சேர்ந்தவர்கள் அதாவது ராதாரவி நடிகர், சமுத்திரகனி இயக்குனர் மற்றும் ஆண்ட்ரியா பாடகி என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News