Red Card For Four Actors: பொதுவாக சினிமா பிரபலங்களால் தயாரிப்பாளர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிடுவார்கள். அவர்கள் விசாரித்து சரியான முடிவை எடுப்பார்கள். அந்த வகையில் இயக்குனர் ஷங்கர் 23ஆம் புலிகேசி படத்தை தயாரித்த போது வடிவேலுடன் பிரச்சனையை சந்தித்தார். அதன் பிறகு வடிவேலு சில வருடங்கள் சினிமாவில் நடிக்க கூடாது என ரெட் கார்டு தடை விதிக்கப்பட்டது.
இப்போது தயாரிப்பு சங்கம் அதிரடியாக சில நடிகர்கள் மீது நடிக்க கூடாது என அதிரடியாக ரெக் கார்டு தடை விதித்துள்ளது. அந்த வகையில் விஷாலை பற்றி ஊர் உலகத்திற்கே தெரிந்த விஷயம் தான். அவருடைய படத்திற்கே படப்பிடிப்புக்கு சரியாக போகாத நிலையில் பல தயாரிப்பாளர்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டார். அதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பு சங்க தலைவராக இருந்த போதும் வரவு செலவு கணக்கு ஒழுங்காக கொடுக்காததால் அவர் மீதும் ரெட் கார்டு பாய இருக்கிறது.
Also Read : பல கோடி கொட்டிக் கொடுத்தாலும் அவன் கூட சேராததற்கு காரணம்.. மிஷ்கினால் மனநலம் பாதிக்கப்பட்ட விஷால்
மேலும் தயாரிப்பாளர் கொடுத்த புகாரின் பேரில் நீதிமன்றத்தில் விசாரித்த போது விஷாலின் வங்கி கணக்கு விபரங்களை ஒப்படைக்க சொல்லி உள்ளனர். இதனால் வேறு தயாரிப்பாளர்களால் குடைச்சல் வரும் என பயந்து போன தயாரிப்பாளர் சங்கம் அடுத்த மூன்று நடிகர்களையும் ரெட் கார்டு லிஸ்டில் சேர்த்துள்ளது.
அவ்வாறு விஷாலால் மாட்டிய மூன்று நடிகர்கள் யார் என்பதை இப்போது பார்க்கலாம். சிம்பு சில வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த நிலையில் ஈஸ்வரன் படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து மாநாடு படத்தில் இருந்து தொடர்ச்சியாக ஹிட் படங்களை சிம்பு கொடுத்திருக்கிறார். இந்நிலையில் சிம்பு கொரோனா குமார் படத்தில் நடிப்பதாக இருந்த நிலையில் சில காரணங்களால் இந்த படத்தில் இருந்து விலகியதால் தயாரிப்பாளர் அவர் மீது புகார் கொடுத்திருந்தார்.
Also Read : நீதிபதி போட்ட போடில் அரண்டு போன விஷால்.. மொத்தமாக ஆட்டம் காண வைத்த லைக்கா
இதனால் சிம்பு மீது ரெட் கார்டு தடை போடப்பட இருக்கிறது. அடுத்ததாக அசுர நடிகர் தனுஷுக்கும் இதே நிலைமை தான். அதாவது தேனாண்டாள் முரளி தயாரிக்கும் படத்தில் 80 சதவீதம் முடித்துவிட்டு அதன் பிறகு நடிக்காமல் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இது தவிர சில தயாரிப்பாளர்களுடன் தனுசுக்கு பிரச்சனை ஏற்பட்டிருப்பதால் அவருக்கு ரெட் கார்டு தடை விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கடைசியாக நடிகர் அதர்வா செம போத ஆகாதே என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் உரிமையை தயாரிப்பாளர் மதியழகனுக்கு கொடுத்திருந்தார். இந்த படம் தோல்வியான நிலையில் இதை சரி கட்டுவதற்காக அவருடைய மற்றொரு படத்தின் நடிக்க அட்வான்ஸ் வாங்கி இருந்தார். ஆனால் நடிக்காமல் இழுத்தடித்ததால் சில கோடிகள் நஷ்டம் அடைந்துள்ளதாக தயாரிப்பாளர் புகார் கொடுத்திருந்தார். இவ்வாறு தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விஷால், தனுஷ், சிம்பு மற்றும் அதர்வா ஆகியோர் மீது ரெட் கார்டு தடை விதிக்க உள்ளனர்.
Also Read : வேட்டையனுக்கு பயத்தை காட்டிய விஷால்.. பின்வாங்கிய சந்திரமுகி 2, காரணம் இதுதான்