தமிழ் சினிமாவில் பல நடிகைகள் பல்வேறு விதமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். ஒரு சில நடிகைகள் ஹீரோயின்கள் கதாபாத்திரத்திற்கு மட்டுமே சரியாக இருப்பார்கள். அதேபோல் சில நடிகைகள் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பது சரியாக இருப்பார்கள்.
ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டும்தான் கதாநாயகி கதாபாத்திரத்திற்கும் குணச்சித்திர கதாபாத்திரத்திற்கும் நடிப்பதற்கு சரியான முக அமைப்புடன் காணப்படுவார்கள். அப்படி அனைத்து கதாபாத்திரத்திற்கும் பொருந்தக்கூடிய நடிகைகளாக ஒரு சில நடிகைகள் இருந்துள்ளனர்.
ஆரம்ப காலத்தில் சிம்ரன் தனது படங்கள் அனைத்திலுமே கவர்ச்சியாக நடித்திருப்பார். இது இவருக்கு பெரிய அளவில் ரசிகர்களிடம் பிரபலம் அடைவதற்கு காரணமாக அமைந்தது. அதன் பிறகு நல்ல பெண்ணாக பல படங்களில் நடித்தார். பின்பு குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வெற்றி பெற்றார்.
திரிஷா முதலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தனது படங்களில் கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார். பின்பு படத்தில் கவர்ச்சி கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். இருப்பினும் திரிஷாவிற்கு எந்தவிதமான கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதில் கச்சிதமாகப் பொருந்த கூடிய நடிகையாக பிரபலமானார்.
ரம்யா கிருஷ்ணன் முதலில் கதாநாயகியாக படங்களில் நடித்தார். அதன்பிறகு மற்ற நடிகைகளின் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும், வில்லி கதாபாத்திரத்திலும் நடித்தார். பின்பு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பொருந்தக்கூடிய நடிகையாக பிரபலமானார். தற்போது கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்த வரிசையில் தேவயானி மற்றும் ஜோதிகா இருவருமே இடம் பிடித்துள்ளனர். ஆரம்ப காலத்தில் இவர்களும் கவர்ச்சியாக நடித்து இருந்தாலும் அதன் பிறகு கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவமுள்ள படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலம் ஆகினர். தற்போதுவரை இவரது படங்கள் மீதான வரவேற்பு இருந்துதான் வருகிறது.