திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வாலி படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட 3 நடிகைகள்.. கடைசியாக தேர்வான இடுப்பழகி சிம்ரன்

அஜித் தற்போது துணிவு படத்தில் நடித்து வருகிறார். எல்லா நடிகைகளுக்குமே அஜித்துடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் தானாக வந்த வாய்ப்பை மூன்று நடிகைகள் தவற விட்டுள்ளனர். அதாவது எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் வாலி.

இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அது மட்டும் இன்றி முதல் முறையாக வாலி படத்தில் தான் அஜித் ஹீரோ, வில்லன் என இரட்டை கதாபாத்திரங்களில் நடித்தார். வாலி படம் வசூல் ரீதியாக நல்ல லாபத்தை பெற்று தந்தது. அவள் வருவாளா படத்திற்கு பிறகு அஜித், சிம்ரன் இருவரும் வாலி படத்தில் நடித்திருந்தார்கள்.

Also Read :அஜித்தை கூப்பிட்டு ரஜினி சொன்ன அறிவுரை.. தப்பை சரிசெய்து இன்றுவரை அதே கோட்டில் நிற்கும் அஜித்

ஆனால் இப்படத்தில் சிம்ரனுக்கு முன்னதாக மூன்று நடிகைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தனர். அதாவது முதலில் கீர்த்தி ஷெட்டி தான் வாலி படத்தில் நடிக்க தேர்வானர். ஒரு சில காரணங்களினால் இவரால் நடிக்க முடியாமல் போனதால் வாலி படத்தில் இருந்து விலகி விட்டார்.

அதன்பிற்கு எஸ்ஜே சூர்யா அஜித்துக்கு சரியான ஜோடியை தேர்ந்தெடுத்தார். அதாவது ரோஜா அல்லது மீனா இவர்களுள் ஒருவரை தேர்வு செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் இருவருமே அப்போ படு பிஸியான நடிகையாக இருந்தார்கள். இதனால் வாலி படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.

Also Read :ஒரே படத்தில் ஹீரோ மற்றும் வில்லனாக நடித்த 6 நடிகர்கள்.. சிம்ரன் அழகில் மயங்கிய வாலி அஜித்

அதன் பிறகு தான் இடுப்பழகி சிம்ரன் வாலி படத்தில் அருமையாக நடித்திருந்தார். மேலும் இப்படத்தை தவற விட்டதற்காக மீனா அதன் பிறகு வருத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து ஆனந்த பூங்காற்றே, சிட்டிசன், வில்லன் போன்ற படங்களில் அஜித்துக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார்.

மேலும் ரோஜா அஜித்துடன் உன்னிடத்தில் என்னை கொடுப்பேன் என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனாலும் வாலி படம் சிம்ரன் கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது. இந்த படத்தில் அவரது நடிப்பை பார்த்த பிரமித்து போன இயக்குநர்கள் தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கொடுத்து வந்தனர்.

Also Read :வில்லி ரோல் பண்ணி கேரியரை தொலைத்த 5 ஹீரோயின்கள்.. ஆரம்பித்து வைத்த சிம்ரன்

Trending News