Dhanush and Sivakarthikeyan: ஒரு காலத்தில் தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில் மட்டும் புது புது படங்கள் வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால் தற்போது வாரத்திற்கு ஐந்து படங்களாவது திரையரங்குகளை நிரப்பி விடுகிறது. அப்படி அளவுக்கு அதிகமாக படங்கள் வெளி வருவதால் எந்த படம் மக்களிடம் ரீச் ஆகிறதோ, அதுவே வசூல் அளவிலும் வெற்றி பெற்று விடுகிறது.
அப்படி இந்தாண்டு தரமான சம்பவத்தை செய்வதற்கு மூன்று படங்கள் தயாராக இருக்கிறது. அதுவும் மறக்கவே முடியாத பயோபிக்ப படமாக வரப்போகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் படம் பொங்கலை ஒட்டி வெளிவந்தது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் மறுபடியும் இந்த கூட்டணி இணைந்திருக்கிறது.
மறுபடியும் போட்டி போட தயாரான தனுஷ் எஸ்கே
ஆனால் இந்த கூட்டணி நிச்சயம் வெற்றி கூட்டணியாக மாறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஏனென்றால் இளையராஜாவின் பயோபிக் கதையை வைத்து படமாக உருவாக்கப் போகிறார்கள். இதில் தனுஷ், இளையராஜாவாக நடிக்கப் போகிறார். எப்படி இளையராஜா ஹார்மோனிய பெட்டியுடன் முதன் முதலில் சென்னைக்கு வந்து இசைஞானியாக மாறினார் என்பது கதையாக வருகிறது.
இதனைத் தொடர்ந்து காஷ்மீரில் நடந்த தீவிரவாதத்திற்கும், இராணுவத்திற்கும் உள்ள போராட்டத்தின் போது உயிரை தியாகம் செய்த மேஜர் முகுந்த் வரதராஜன் கதையே கொண்டு சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். அதாவது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், கமல் தயாரிப்பில், எஸ்கே நடிப்பில் அமரன் படம் உருவாகி வருகிறது.
அடுத்ததாக கர்நாடகாவின் கோலார் தங்க சுரங்கத் தொழிலாளர்களின் வாழ்க்கையை சுற்றி நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையே வைத்து விக்ரம் நடிப்பில் தங்கலான் படம் உருவாகி இருக்கிறது. பா ரஞ்சித் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் விக்ரம் நடிப்பில் உருவாகிய இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது.
ஆக மொத்தத்தில் இந்த ஆண்டு மூன்று தரமான சம்பவம் தயாராக இருக்கிறது. ஆனாலும் இதிலும் நாங்கள் போட்டி போட தான் செய்வோம் என்று எதிரும் புதிருமாக தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் எதிர்த்து நிற்கிறார்கள். யாருக்கு வெற்றி கிடைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.