திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சன் டிவியில் அடுத்தடுத்து வரிசை கட்டி இருக்கும் புத்தம் புது 3 சீரியல்கள்.. ப்ரைம் டைமிங்கை லாக் பண்ணிய ஆடுகளம்

Sun tv 3 new Serial: பொதுவாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் முக்கால்வாசி இரண்டு வருடங்களை கடந்த பின்பு தான் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வருவார்கள். அந்த வகையில் நெடுந்தொடராக பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் சில சீரியல்கள் தற்போது கிளைமாக்ஸ் கிட்ட நெருங்கி இருக்கிறது. இதில் இனியா சீரியல் வருகிற நாட்களுடன் முடிய போகிறது.

இதனைத் தொடர்ந்து சுந்தரி மற்றும் கயல் சீரியலும் முடிப்பதற்கு முடிவெடுத்து விட்டார்கள். அதனால் இந்த டைமிங் இல் புத்தம் புது சீரியலை கொண்டு வருவதற்கு அடுத்தடுத்து சில சீரியல்கள் வரிசை கட்டி இருக்கிறது. அந்த வகையில் சன் டிவியில் தற்போது மூன்று புது சீரியல்களின் பிரமோ வெளியாகி இருக்கிறது.

இதில் நண்பர்களை மையமாக வைத்து ரஞ்சனி சீரியல் தினம் தோறும் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும். இதனை அடுத்து ராகவி சீரியலும் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறது. இதில் சுந்தரி சீரியலில் ஹீரோவாக நடிக்கும் கார்த்திக் தான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார். இவருக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் ஜீ தமிழ் சீரியலில் இருந்து கமிட் ஆகி இருக்கிறார்கள்.

அடுத்ததாக ஆடுகளம் என்ற சீரியலின் பிரம்மோவும் தற்போது வெளியாயிருக்கிறது. இதில் அன்பே வா சீரியலில் பூமிகா கதாபாத்திரத்தில் நடித்த டெலினா டேவிஸ் கமிட் ஆகி இருக்கிறார். இவருக்கு ஜோடியாக விஜய் டிவியில் மௌனம் பேசியதே சீரியல் நடித்த ஹீரோ நடித்துள்ளார். இந்த சீரியல் சுந்தர் சீரியலுக்கு பதிலாக பிரேம் டைமில் ஒளிபரப்பாக போகிறது.

இது மட்டுமில்லாமல் இன்னும் அடுத்தடுத்து புது சீரியல்களும் வர இருக்கிறது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவிக்கு ஈடு இணையாக வேறு எந்த சேனலும் வராதபடி வித்தியாசமான கதையுடன் புத்தம் புது சீரியல்களை வரிசையாக இறக்கி கொண்டே வருகிறது. அதனால் மக்களும் சன் டிவி சீரியலுக்கு தொடர்ந்து பேராதரவு கொடுத்து வருகிறார்கள்.

Trending News