Actor Kamal: தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பால் தனி முத்திரை பதித்துக் கொண்டிருப்பவர்தான் உலகநாயகன் கமலஹாசன். 35 வருடத்திற்கு முன்பு இவர் நடித்த முதல் அரசியல் படத்தை பார்த்துவிட்டு, முக்கிய பிரபலங்களாக மூன்று இயக்குனர்கள் மாறி இருக்கின்றனர்.
1988 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல் நடித்த சத்யா திரைப்படம் அரசியல் கலந்த ஆக்சன் படமாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் தான் உலக நாயகனின் சினிமா வாழ்க்கையில் முதல் முதலாக நடித்த அரசியல் படம்.
இந்த படம் கமலுக்கும் சரி தமிழ் சினிமாவிற்கும் சரி முக்கியமான வெற்றிப் படமாக அமைந்தது. இந்த படத்தை பார்த்து பல பேர் சினிமாவிற்கு இயக்குனர்களாக வந்தனர். இதில் இந்த படத்தை பார்த்து மூன்று இயக்குனர்கள் சினிமாவிற்குள் நுழைந்து தற்போது டாப் இயக்குனர்களாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர்.
இயக்குனர்களான கௌதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ் தற்பொழுது வரை இந்த படத்தை பற்றிய இவர்கள் பேசி வருவார்கள். கௌதம் வாசுதேவ் மேனன் படத்தில் வரும் ஹீரோக்கள் கையில் காப்பு போட்டு இருப்பார்கள். இவருடைய வாரணம் ஆயிரம், காக்க காக்க போன்ற படங்களில் சூர்யாவின் கையிலும், ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்தில் சிம்பு கையிலும் காப்பை பார்க்க முடியும்.
Also Read: சிம்புவை தூக்கிவிட படாத பாடுபடும் கமல்.. செஞ்ச சத்தியத்தை காப்பாற்றும் ஆண்டவர்
இந்த ஸ்டைலை சத்யா படத்தில் கமலை பார்த்து தற்போது வரை தன்னுடைய கதாநாயகன்களுக்கும் கௌதம் வாசுதேவ் மேனன் செய்து வருகிறார். அதே மாதிரி தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசம் காட்டிக் கொண்டிருக்கும் வெற்றிமாறனும், லோகேஷ் கனகராஜ் இருவருடைய படத்தின் கதாநாயகர்கள் தாடி வைத்து தான் நடிக்க வைப்பார்கள். ஏனென்றால் சத்யா படத்தில் கமல் தாடி வைத்திருப்பார்.
இவ்வாறு 35 வருடத்திற்கு முன் வந்தாலும் சத்யா என்ற படம் தமிழ் சினிமாவில் பல பேரை நடிகர்களாக மற்றும் இயக்குனராக உருவாக்கியுள்ளது. அதிலும் அந்தப் படத்தில் கமல் போட்டிருந்த காப்பை வைத்தே இப்போது வரை கௌதம் வாசுதேவ் மேனன் தன்னுடைய படங்களில் இளசுகளை கவரும் விதத்தில் வித்தை காட்டிக் கொண்டிருக்கிறார்.
Also Read: கமலால் அடுத்த லெவல் சென்ற படம்.. அக்கட தேசத்தை மிரள வைக்கும் ஆண்டவர்