வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

3 முறை அஜித் ஆசைபட்டும் மதிக்காத பாலா.. ஏகே மனக்கோட்டையை மொத்தமாய் உடைத்த வணங்கான்

1999 ஆம் ஆண்டு பாலாவின் முதல் படமான சேது வெளியானது. அந்த படத்தின் தாக்கம் எல்லா ஹீரோக்களிடமும் பாலாவை கொண்டு சென்றது. அஜித்தும் பாலாவுடன் சேர்ந்து படம் பண்ண ஆசைப்பட்டார். அதன் காரணமாக பூரண சந்திரராவ் என்ற தயாரிப்பாளர் அஜித் -பாலா கூட்டணிக்கு ஆரம்பப் புள்ளி வைத்தார்.

தயாரிப்பாளர் பூரண சந்திர ராவ் இருவரையும் சந்திக்க வைத்து கதை விவாதத்திற்கு ஏற்பாடு செய்தார். ஆனால் பாலா கதையவே சொல்லவில்லையாம். அந்த சந்திப்பில் அஜித், பாலாவிடம் திருப்தி அடையவில்லை. மாறாக இவருடன் வேலை செய்வது சரிவராது என ஒதுங்கி விட்டார்.

அதன் பின் பாலா இயக்கிய பிதாமகன் படம் தேசிய விருது வாங்கியது. அப்பொழுதும் அஜித்திற்கு பாலாவுடன் மீண்டும் இணைய ஆசை வந்தது. தன்னுடைய நெருங்கிய நண்பரும் தயாரிப்பாளருமான எஸ் எஸ் சக்கரவர்த்தியை பாலாவிடம் அனுப்பினார் அஜித். ஆனால் பெரிய பட்ஜெட் கேட்டதால் அப்பொழுதும் கூட்டணி போட முடியவில்லை.

இப்படி இரண்டு முறை இவர்கள் கூட்டணி கைநழுவி போனது. மூன்றாவது முறையாக அஜித்திற்கு பாலா உடன் படம் பண்ணலாம் என்ற எண்ணம் துளிர்விட்டது. அப்பொழுது ஒரு கோடி ரூபாய் வரை பாலா சம்பளம் கேட்டுள்ளார். தயாரிப்பாளர் ஏ எம் ரத்தினம் அதை கொடுப்பதற்கு முன் வந்தார்.

அஜித் மற்றும் பாலா கூட்டணியில் “நான் கடவுள்” படம் உருவாக காத்திருந்தது. இந்த நேரத்தில் அஜித் சினிமாவில் பெரிய ஆளாக மாறிவிட்டார். பாலாவிடம் முழு கதையையும் கேட்டுள்ளார் ஆனால் அவர் கதை சொல்ல மறுத்துவிட்டார். இதனால் நெருடலான அஜித் இனிமேல் பாலாவுடன் படம் பண்ண கூடாது என நிரந்தர முடிவை எடுத்து விட்டார்.

Trending News