செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

எதிர்நீச்சல் நந்தினி அப்பா செய்யும் சூழ்ச்சி.. நல்லவனா கெட்டவானன்னு தெரியாமல் சுற்றும் 3 பேர்

ஞாயிற்றுக்கிழமை கூட ரெஸ்ட் கொடுக்காமல் ஒட்டுமொத்த இல்லத்தரசிகளையும் எதிர்பார்க்க வைத்துள்ளது எதிர்நீச்சல் சீரியலின் அடுத்த பாகம். இந்த சீரியலில் வீட்டில் சுற்றிக்கொண்டு இருக்கும் மூன்று கதாபாத்திரங்களை கணிக்கவே முடியவில்லை.

வீட்டில் விசாலாட்சி, கதிர், ஞானம், இவர்கள் 3 பேரும் எதை நோக்கி போறார்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது. ஒரு பக்கம் எதற்கெடுத்தாலும் கண்ணீர் விட்டு அழுகிறார் ஞானம். இன்னொரு பக்கம் விசாலாட்சி ஈஸ்வரியுடன் பாச போராட்டம் நடத்தி வருகிறார்.

விசாலாட்சி “நான் அப்போது நிறைய தப்பு பண்ணி விட்டேன் என மருமகளிடம் மன்னிப்பும் கேட்கிறார்” அதே சமயம் சக்தி மற்றும் ஜனனி இருவருக்கும் குழந்தை இல்லை என வாய்க்கு வந்தபடி பேசுகிறார். இதனால் அவர் நல்லவரா, இல்லை வேஷம் போடுகிறாரா என்பது தெரியவில்லை.

மறுபுறம் கதிர் அவர் மனைவியுடன் மற்றும் இணக்கமாக இருக்கிறார் மற்ற அனைவரையும் வாய்க்கு வந்தபடி பேசுகிறார். மற்றவர்கள் துன்பப்படும் போது மறைந்திருந்து சிரிக்கிறார். நந்தினி அப்பா கதிரிடம் நீங்கள் அடுத்த குணசேகரனாக மாற வேண்டும் எனவும் கூறுகிறார். அதனால் இவருடைய கதாபாத்திரமும் புரியாத புதிராக இருக்கிறது.

எதற்கெடுத்தாலும் முன்கோபம் படும் ஞானம் வந்தா மலை போனா போகட்டும் என்பது போல் தான் இருந்து வருகிறார். எப்படியும் தனக்கு உண்டான சொத்துக்களை மீட்பதற்கு துடித்து வருகிறார். ஆனால் இவரும் சில நேரங்களில் அப்பாவி போய் இருந்தாலும் காரியத்தில் கண்ணாக இருக்கிறார்.

Trending News