Dragon: சமீபத்தில் ரிலீசான டிராகன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரங்கநாதனின் நடிப்பு படத்திற்கு பெரிய பாசிட்டிவ்.
படத்தின் உண்மை கதையை ட்ரைலரில் சொல்லாமல் தியேட்டருக்கு வந்து படம் பார்த்தவர்களுக்கு பெரிய இன்ப அதிர்ச்சியை கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பு பெரிய அளவில் பாராட்டு பெற்றது.
ஆனால் அவரைத் தாண்டி இந்த இரண்டு பேருக்காக இந்த படத்தை பார்க்கலாம் என்று சொல்லும் அளவுக்கு நடிப்பில் பிச்சு உதறி இருக்கிறார்கள்.
இவங்களுக்காகவே படத்தை பார்க்கலாம்!
முதலில் பிரதீப் ரங்கநாதனின் அப்பாவாக நடித்த ஜார்ஜ் மரியான். இவருடைய நடிப்பு ஏற்கனவே கைதி படத்தில் பெரிய அளவில் பெயர் வாங்கியது.
ஆனால் அது எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு இந்த படத்தில் நடித்திருக்கிறார். படம் முழுக்க சைலன்ட் மோடில் தான் இவருடைய கேரக்டர் இருக்கும்.
ஒரு கட்டத்தில் மகன் தப்பு செய்கிறான் என்று தெரிந்ததும் அவனுடைய அம்மா சட்டையை பிடித்து கேள்வி கேட்பார். ஆனால் ஜார்ஜ் மரியான் அந்த இடத்திலும் அமைதியாக தான் இருப்பார்.
ஆனால் எல்லாத்தையும் இழந்து எதுவுமே இல்லாமல் பிரதீப் நிற்கும்போது நீ எழுந்து தைரியமா ஓடுப்பா அப்பா இருக்கிறேன் என்று சொல்லும் வார்த்தை மெய்சிலிர்க்க வைத்திருக்கும்.
அதே மாதிரி ப்ரொபசர் மயில்வாகனன் கேரக்டரில் நடித்த மிஷ்கின். இப்படி கூட நடிக்க தெரியுமா என்று ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
ஆரம்பத்தில் அவரிடம் வில்லத்தனம் தெரிந்தாலும் கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரையும் உணர்வுபூர்வமாக கண்கள் கலங்க வைத்திருப்பார்.
பிரதீப் எக்ஸ் காதலியாக வரும் அனுபமா பரமேஸ்வரனும் தன்னுடைய கேரக்டரில் சிறப்பாக நடித்திருப்பார்.
தன்னுடைய குற்ற உணர்ச்சியில் இருந்து விடுபட பிரதீப்புக்கு அவர் செய்யும் உதவி, அனுபமா சொன்ன ஒரு வார்த்தை பிரதீப்புக்கு கற்றுக் கொடுக்கும் பாடம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை நியாயப்படுத்தி இருந்தது.