திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சிம்புவின் நடிப்பில் தொடர்ந்து வரவிருக்கும் 3 படங்கள்.. காற்று வீசும் போதே கஜானாவை நிரப்பனும் தம்பி

சிம்பு நடித்த திரைப்படங்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு, இந்த வருடம் அடுத்தடுத்த ரிலீசாக உள்ளது சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் கடந்த வருடம் நவம்பர் மாதம் திரையரங்குகளில் ரிலிஸாகி மாபெரும் வெற்றி பெற்றது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீசாகும் என அண்மையில் இப்படத்தின் டீசர் மூலமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

இதனிடையே தற்போது ஹன்சிகா, சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மகா திரைப்படம் இந்த மாதம் கடைசியில் வெளியாக உள்ளது. மேலும் சிம்புவின் நடிப்பில் உருவாகி வரும் பத்து தல திரைப்படம் இந்த வருடத்தின் கிறிஸ்துமஸ் அன்று ரிலீஸ் செய்யப்படும் எனவும் தகவல் வெளியானது. மேலும் இப்படத்தின் இருபது நாள் கால்ஷீட் மட்டுமே சிம்பு நடிக்க இருப்பதால் கூடிய விரைவில் பத்து தல படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் சிம்புவின் தந்தையும், நடிகர் இயக்குனருமான டி .ராஜேந்தரின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்து உள்ளார். இதனிடையே டி.ராஜேந்தரின் உடல்நிலை தேறியதைக் கொண்டாடும் விதமாக சிம்புவின் அடுத்தடுத்த திரைப்படங்கள் வேகமாக ரிலீஸ் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சிம்புவின் திரைப்படங்கள் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் அடுத்தடுத்த மூன்று திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. மேலும் சிம்பு, கௌதம் வாசுதேவ் மேனன், ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் ஏற்கனவே அச்சம் என்பது மடமையடா, விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீஸாகி மாபெரும் வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் இதே கூட்டணியில் உருவாகி உள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கும் அதிகமான எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தி உள்ளது. மேலும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படமும் ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படமும் ஒரே நாளில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News