நடிகர் தனுஷின் மனைவியும், நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா தனுஷ் இயக்குனராக அறிமுகமான படம் தான் 3. இப்படத்தில் தனது கணவர் தனுஷையே நாயகனாக வைத்து ஐஸ்வர்யா இயக்கியிருந்தார்.
கடந்த 2012ல் வெளியான இப்படத்தின் கதை களமும், படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்களும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் புகழ் பெற்றது. இப்பாடலை தனுஷ் பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் பள்ளி மற்றும் கல்லூரி பருவம், திருமணமான இளைஞன் என முப்பரிமாணங்களில் தனுஷ் தனது நடிப்பை திறமையாக வெளிப்படுத்தி இருப்பார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்து இருந்தார்.
இந்நிலையில் இப்படத்தின் நாயகியாக முதலில் நடிக்க இருந்தது, நடிகை அமலா பால் என்றும், அவரின் கால்சீட் கிடைக்காத காரணத்தினால் நடிகை ஸ்ருதி ஹாசன் தேர்வு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் இப்படத்திற்கு பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டு பாகங்களிலும் நடிகை அமலாபால் தனுஷுக்கு ஜோடியாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் 3 படத்தில் தனுஷுக்கு நண்பனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
