சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

விஜய் இன்று வரை ஒதுக்கி வைத்திருக்கும் 3 இயக்குனர்கள்.. பல கோடி கொடுத்தாலும் தளபதி கிட்ட வேலைக்கு ஆகாது

Actor Vijay : விஜய் இன்னும் இரண்டு படங்களுடன் சினிமா கேரியரை முடித்துக் கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகிறது. இதனால் அவரது கடைசி இரண்டு படங்களை யார் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு கோலிவுட் சினிமாவில் அதிகமாக இருக்கிறது. ஆனாலும் இன்று வரை மூன்று இயக்குனர்களை விஜய் ஒதுக்கி வைத்திருக்கிறார்.

பல கோடிகள் கொடுத்தாலும் அவர்கள் படமே வேண்டாம் என்று இருக்கிறார். அதாவது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மூன்று படத்தில் நடித்திருந்தார். அதாவது துப்பாக்கி, கத்தி மற்றும் சர்கார் படங்களை முருகதாஸ் தான் இயக்கி இருந்தார். ஆனால் அவரது படங்கள் தொடர்ந்து காபி பிரச்சனையில் சிக்கி வந்தது.

ஆகையால் இனி ஏஆர் முருகதாஸ் உடன் கூட்டணி போட வேண்டாம் என்ற முடிவுக்கு விஜய் வந்துவிட்டார். அடுத்ததாக விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்த கில்லி படத்தை இயக்கியவர் தரணி. இதே காம்போவில் உருவான குருவி படம் மோசமான தோல்வி அடைந்ததால் அதன் பிறகு தரணியுடன் விஜய் கூட்டணி போடவில்லை.

Also Read : விஜய்க்கு எதிராக எழும் கடும் எதிர்ப்பு.. அரசியல் என்ட்ரியால் மொத்த ரசிகர் மன்றமும் கலைப்பு

கௌதம் வாசுதேவ் மேனன் கமல், சூர்யா, சிம்பு என டாப் நடிகர்களின் படங்களை இயக்கியிருக்கிறார். ஆனால் விஜய்யுடன் தற்போது வரை அவர் கூட்டணி போடவில்லை. ஏற்கனவே இவர்களது கூட்டணியில் யோகன் அத்தியாயம் ஒன்று என்ற படம் தொடங்கப்பட்டது. சில காரணங்களினால் அந்த படம் பாதியிலேயே தடைப்பட்டது.

அதிலிருந்து மீண்டும் கௌதம் மேனன் உடன் தளபதி கூட்டணி போட மறந்துவிட்டார். இந்நிலையில் விஜய் தற்போது வெங்கட் பிரபுவுடன் முதல் முறையாக கூட்டணி போட்டுள்ள நிலையில் கோட் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் ரிலீஸுக்காக தான் தளபதி ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

Also Read : புஸ்ஸி ஆனந்தை விஜய் கண்மூடித்தனமாக நம்புவதற்கு முக்கிய காரணம்.. ஆடு பகை குட்டி உறவா?

Trending News