இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இம்மாதம் 10 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸான ஜெயிலர் படம் 500 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் கடத்தல் கும்பல்களை மையமாக வைத்து கதை அமைந்திருக்கும்.
ரஜினியின் முந்தைய திரைப்படமான அண்ணாத்த படத்தின் தோல்விக் காரணமாக துவண்டு போயிருந்த ரசிகர்களுக்கு தற்போது ஜெயிலர் படம் மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்துள்ளது. தற்போது வரை 600 கோடி வசூலை ஈட்டியுள்ள இப்படம், இன்னும் கொஞ்சம் நாட்கள் திரையரங்குகளில் ஓடினால் 800 கோடியை அசால்ட்டாக வசூலாகிவிடும்.
Also Read: ஓடிடி ஜெயிலர் வசூலுக்கு ஆப்பு அடித்த விஷமிகள்.. என்னடா இது கலாநிதிக்கு வந்த சோதனை
அந்த வகையில், ஜெயிலர் படத்தில் 72 வயதிலும் மாஸ் ஆக்ஷன் பண்ண சூப்பர்ஸ்டார் 70 சதவிகிதம் இப்படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தாலும், மீதமுள்ள 30 சதவிகிதம் இப்படத்தில் நடித்த வில்லன்களால் தான் ஜெயிலரின் வெற்றி அமோகமாக ஆனது. அந்த அளவுக்கு இப்படத்தில் வில்லன்களாக நடித்த ஜாக்கி ஷெராப், விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்டோர் வேற லெவலில் வில்லத்தனத்தை காண்பித்திருப்பர்.
அந்த வகையில் மலையாள நடிகரான நடிகர் விநாயகன் ஜெயிலர் படத்தில் வர்மன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியிருப்பார். இவர் சூப்பர்ஸ்டாருடன் நடித்திருக்கும் காட்சிகளில் அவர் பேசும் வசனம், முகபாவனை, அவர் கேட்கும் பாடல்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களுக்கு புதுமையானதாக அமைந்தது. இவர் இப்படத்திற்கு முன்பு திமிரு, மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும், ஜெயிலர் படம் இவரை உச்சாணிக்கு கொண்டு சென்றது.
Also Read: அம்மாடியோ! ஜெயிலர் ஓடிடி உரிமை இத்தனை கோடியா.? தட்டி தூக்கிய நிறுவனம், ரிலீசில் ஏற்பட்ட சிக்கல்
அதிலும் இவர் சூப்பர்ஸ்டாரை பார்த்து மனசிலாயோ என மலையாளத்தில் பேசும் வசனம் திரையரங்கில் விசில் சத்தம் ஆர்ப்பரித்தது. இதனிடையே ஜெயிலர் படத்திற்காக பல நடிகர்கள் கோடிகளில் சம்பளம் வாங்கி இருந்தாலும், நடிகர் விநாயகனுக்கு இப்படத்தில் நடிக்க வெறும் 35 லட்சம் தான் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவருக்கு சம்பளமாக கொடுத்தது.
இவரது சம்பள விவரம் வெளியாகி ரசிகர்களை ஒருபக்கம் அதிர்ச்சியடைய செய்தாலும், ஜெயிலர் படத்தின் மூலமாக கிடைத்த வெற்றி வாய்ப்பால், தொடர்ந்து மூன்று தமிழ் படங்களில், முக்கிய வில்லன் கதாபத்திரத்தில் விநாயகன் நடிக்க கமிட்டாகியுள்ளார். அந்த வகையில் இந்த படங்களுக்காக விநாயகன் வாங்கிய சம்பளம் தலா 1 கோடியாம். காற்றுள்ளபோதே தூற்றி வரும் விநாயகன் தற்போது தனுஷின் கேப்டன் மில்லர் படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.