புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஒன்னு இல்லன்னா இன்னொன்னு, கார்த்தி லைன் அப்பில் 3 படங்கள்.. தீபாவளிக்கு குண்டு போட வரும் ஜப்பான்

Actor Karthi: சினிமாவை பொறுத்தவரை வெற்றி தோல்வி என்பது ஏற்ற இறக்கமாகத்தான் இருக்கும். அந்த வகையில் கார்த்தி நடிப்பில் வந்த படங்கள் அதிக அளவில் வெற்றி பெற்று மக்களிடம் அமோக வரவேற்பை அடைந்திருக்கிறது. அதில் ஒரு சில படங்கள் தோல்வியும் அடைந்திருக்கிறது. அந்த வகையில் கடந்த வருடம் வெளிவந்த விருமன் படம் மக்களிடம் மொக்கை வாங்கியது.

ஆனாலும் அதையெல்லாம் மறக்கடிக்கும் விதமாக பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவருடைய மனதிலும் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இப்படம் நகை திருட்டு ஏற்பட்ட உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது.

இதில் கார்த்தி, ஜப்பான் என்ற கேரக்டரில் 200 கோடியை திருடிக் கொண்டு வெளிநாட்டுகளில் சொகுசு வாழ்க்கையே வாழும் கதையாக எடுக்கப்பட்டிருக்கிறது.  ஜப்பானை நோக்கி எத்தனை குண்டு போட்டாலும் ஒன்னும் பண்ண முடியாது என்ற டயலாக்கை பேசி ஹைலைட் ஆக்கி இருப்பார். அப்படிப்பட்ட இப்படம் வருகிற தீபாவளி அன்று திரையரங்குகளுக்கு குண்டு போட வருகிறது.

மேலும் இப்படத்தில் இவருடைய வித்தியாசமான கெட்டப்புடன் தகதகவென்று மின்னும் சட்டையை போட்டுக்கொண்டு ஒரு தங்க பல்லை வைத்துக்கொண்டு சுற்றுவார். அந்த வகையில் இப்படம் மக்களுக்கு பிடித்த மாதிரி அமைந்தால் ஓகே. இல்லை என்றால் அடுத்தடுத்து படங்களை ரிலீஸ் பண்ணி விட வேண்டும் என்ற நோக்கில் இருக்கிறார்.

அதனால் இவரிடம் ஜப்பான் படம் போக அடுத்து இரண்டு படங்கள் லைனில் இருக்கிறது. அந்த இரண்டு படங்களுமே ஏற்கனவே முதல் பாகத்தில் வெற்றியை கொடுத்த படங்கள். அந்தப் படங்களை தான் மறுபடியும் எடுத்து இரண்டாம் பாகமாக கொடுக்க இருக்கிறார். அப்படி இவர் நடிக்கப் போகும் படம் கைதி 2 மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று.

அந்த வகையில் இப்படத்தில் உள்ள இரண்டு இயக்குனர்களும் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு தயாராக இருக்கிறார்கள். அதில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை எடுத்த எச்.வினோத் கதை ரெடி என்று கிரீன் சிக்னல் கொடுத்து இருக்கிறார். அடுத்தபடியாக லோகேஷும் லியோ படத்தை முடித்ததால் கைதி 2க்கு தயாராகி விட்டார். அதனால் ஒன்னு போனாலும் இன்னொன்னு இருக்கு என்ற தைரியத்தில் கார்த்தி துணிச்சலுடன் வலம் வருகிறார்.

Trending News