வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 21, 2025

இட்லி வேகல, குட் பேட் அக்லி முடியல, தக்லைப் ஸ்ட்ரைக்.. சூர்யாக்கு அஜித் வைக்கும் செக்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மூன்று படங்கள் ரிலீசில் இன்னும் குழப்பம் நீடித்து வருகிறது. தனுஷ், அஜித், கமல் என மூவரும் அடுத்தடுத்த படத்தில் நடித்து வருகிறார்கள். இதில் தனுஷ், இட்லி கடை படத்தை இயக்கி வருகிறார். ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கும் குட்பேட் அக்லி படத்தில் அஜித் நடித்து வருகிறார்.

மணிரத்தினம் இயக்கி வரும் தக்லைப் படத்தில் கமல் மற்றும் சிம்பு இணைத்து நடித்த வருகிறார்கள். இந்த மூன்று படத்தின் ரிலீஸ் தேதியையும் ஏற்கனவே அறிவித்துவிட்டார்கள். ஆனால் இன்றுவரை அதை உறுதி செய்யாமல் தயாரிப்பாளர் தரப்பு இழுத்தடித்து வருகிறது.

இப்பொழுது படங்கள் ரிலீஸ் செய்வது தயாரிப்பாளர்கள் கையில் இல்லை, மாறாக இது அனைத்தும் ஓ டி டி நிறுவனங்கள் கைக்கு போய்விட்டது. அவர்கள்தான் படத்தை ரிலீஸ் செய்வதை தீர்மானிக்கிறார்கள். படம் தியேட்டரில் எப்பொழுது ரிலீஸ் ஆக வேண்டும் என்பதையும், அதன் பிறகு குறிப்பிட்ட நாள்களுக்கு தங்களது ஓ டி டி தளத்திலும் ரிலீஸ் செய்து லாபம் பார்க்கின்றனர்.

இட்லி கடை மற்றும் குட் பேட் அக்லி இரண்டு படங்களும் ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸ் செய்வதற்கு திட்டமிட்டு இருந்தனர். ஆனால் இட்லி கடை படம் இன்னும் முடியவில்லை. அதனால் அது தள்ளிப்போகிறது. அதை போல் மே1 அஜித்தின் பிறந்தநாள் வருகிறது அன்று குட்பேட் அக்லி படத்தை ரிலீஸ் செய்யலாம் என திட்டம் போடுகிறார்.

ஜூன் ஐந்தாம் தேதி தக்லைப் படம் ரிலீஸ் என்று சொன்னார்கள். ஆனால் ஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக் அறிவித்துள்ளனர். இதனால் அங்கே படம் திரையிடுவது கஷ்டம். கமலுக்கு கேரளாவில் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அதனால் இந்த படமும் தள்ளி போகிறது. மே ஒன்று குட் பேட் அக்லி மற்றும் சூர்யாவின் ரெட்ரோ படம் ரிலீஸ் ஆக உள்ளது.

Trending News