திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ரொமான்ஸ், நடிகையுடன் டூயட் இல்லாமல் அஜித் வெற்றி கண்ட 3 படங்கள்.. ஆட்ட நாயகனாக சாதித்து காட்டிய ஏகே

இப்போது உள்ள காலகட்டத்தில் படங்களில் கதாநாயகிகளுடன் டூயட், ரொமான்ஸ் இல்லாமல் வெற்றி காண்பது மிகவும் கடினம். அதுவும் டாப் நடிகர்களின் படங்களில் பெரும்பாலும் ஹீரோயினுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்காது. வெறுமனே பாடல் காட்சிகளுக்காகவும், ரொமான்ஸ்காவும் பயன்படுத்தி இருப்பார்கள்.

ஆனால் படத்தில் கதாநாயகிகள் இல்லாமலும் சில இயக்குனர்கள் வெற்றி கண்டுள்ளனர். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் கைதி, விக்ரம் போன்ற படத்தில் கதாநாயகிகள் இல்லாமல் படம் எடுத்து வெற்றி கண்டிருந்தார். அந்த வகையில் அஜித்தும் கதாநாயகிகளுடன் ரொமான்ஸ், டூயட் இல்லாமல் மூன்று படங்களில் வெற்றி கண்டுள்ளார்.

Also Read : வேர்ல்ட் டூரை தள்ளி வைத்த அஜித்.. லியோ காட்டிய பயத்தால் விரைவில் வெளிவர உள்ள ஏகே 62 அப்டேட்

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் 2013 இல் வெளியான ஆரம்பம் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் டாப்ஸி, நயன்தாரா போன்ற கதாநாயகிகள் நடித்தாலும் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவில்லை. அதேபோல் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்திலும் ஹூமா குரேசி நடித்திருந்தார்.

மேலும் துணிவு படத்திலும் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர் நடித்திருந்தார். ஆனால் இவர்களையெல்லாம் அஜித்துக்கு ஜோடியாகாமல் நட்பான கதாபாத்திரங்களாக பயன்படுத்தி இருந்தார்கள். அதிலும் மஞ்சு வாரியருக்கு அஜித்துக்கு இணையான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது.

Also Read : கவனமாக காய் நகர்த்தும் அஜித்.. ஏகே 62 தாமதமாக வெளிவர இது தான் காரணம்

இவர்களுடன் டூயட் பாடலோ, ரொமான்சோ இந்த படங்களில் இடம்பெறவில்லை. அஜித் தன்னை நம்பியும், கதையை நம்பியும் இந்த படங்களில் நடித்து வெற்றி கண்டுள்ளார். கடைசியாக வெளியான துணிவு படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது.

அதுமட்டுமின்றி அஜித் ரசிகர்களும் அவரை நம்பி தான் படத்தை பார்க்க வருகிறார்கள். இவ்வாறு தன் மீது உள்ள நம்பிக்கையால் ஆட்டநாயகனாக தொடர்ந்து அஜித் ஜெயித்து வருகிறார். இப்போது மகிழ்திருமேனி, அஜித் இணையும் ஏகே 62 படத்திற்கான அறிவிப்புக்காக அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

Also Read : நம்ப வைத்து மோசம் செய்த அஜித்.. பாக்ஸ் ஆபிஸ் ஹீரோவிடம் தஞ்சமடைந்த விக்னேஷ் சிவன்

Trending News