பொதுவாக 20 ஓவர் போட்டிகளில் கடைசி கட்டங்களில் விக்கெட்டுகளை எளிதாக எடுக்க முடியும். இறுதியில் இறங்கும் அனைத்து வீரர்களும் அடித்து விளையாட வேண்டும் என்ற எண்ணத்தோடு களம் இறங்குவார்கள். அப்படி விளையாடும் பொழுது தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகள் விழுவது என்பது அரிதான ஒன்று. இந்த உலகக் கோப்பையில் மட்டும் 3 விக்கெட்டுகளை தொடர்ச்சியாக எடுத்து ஹாட்ரிக் சாதனை புரிந்த வீரர்களின் பட்டியல்.
கசிஸ்கோ ரபாடா VS இங்கிலாந்து: தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த முக்கியமான குவாலிபயர் போட்டியில், ஹாட்ரிக் சாதனை எடுத்து அணியை வெற்றி பெறச் செய்துள்ளார் ரபடா. இங்கிலாந்து அணி வெற்றிபெறாவிட்டாலும், ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறியது. ரபாடா இந்தப்போட்டியில் லிவிங்ஸ்டன், மோர்கன், ஜோர்டன் என அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு பெரிதும் உதவினார்.
வணிந்து ஹசரங்கா VS தென்னாபிரிக்கா: எய்டன் மார்க்ரம், டெம்பா பாவுமா, பெட்டோரீயஸ் என அடுத்தடுத்து மூன்று முக்கியமான விக்கெட்டுகளை எடுத்து ஹாட்ரிக் சாதனை புரிந்தார் ஹசரங்கா. 3 விக்கெட்டுகளை தொடர்ச்சியாக எடுத்தாலும் அந்த போட்டியில் இலங்கை அணி தோல்வியை தழுவியது.
கர்திஸ் கேம்பர் VS நெதர்லாந்து: இந்த உலக கோப்பையில் தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது கேம்பர். இவர்தான் ஹாட்ரிக் விக்கெட்டுகளை இந்த உலகக்கோப்பையில் ஆரம்பித்து வைத்தார். இவர் தொடர்ந்து 3 விக்கெட்டுகள் மட்டுமல்லாது 4வது விக்கெட்டையும் எடுத்து சாதனை படைத்துள்ளார். அச்கேர்மேன், ராயன், எட்வேர்ட்ஸ் என அடுத்தடுத்து மூன்று நெதர்லாந்து விக்கெட்டுகளை எடுத்தது மட்டுமல்லாமல் நான்காவது பந்தில் ரோஎலோப் வன்டேர் மேர்வே என்பவரது விக்கெட்டையும் எடுத்து சாதனை படைத்தார்.