வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கொண்டாடும்போதே வழி மாறி முடிவெடுத்த 3 ஹீரோக்கள்.. சந்தானத்தை போல ஏமாறும் இரண்டு நடிகர்கள் 

Actor Santhanam: சினிமாவில் மக்கள் ஒரு நடிகனை எப்படி கொண்டாடுகிறார்கள், எந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள் என்பது தெரியாமலேயே பல நடிகர்கள் தங்கள் பெயரை கெடுத்து கொள்கின்றனர். அதிலும் குறிப்பிட்டு சொல்லக் கூடிய மூன்று நடிகர்களை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கும் போதே வழி மாறி சென்று விட்டனர்.

டாப் நடிகர்களின் படங்களில் முன்னணி காமெடி நடிகராக கலக்கிக் கொண்டிருந்த சந்தானம், டைமிங் காமெடியில் எல்லாம் பிச்சு உதறுவார். இவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் இருந்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று காமெடி பண்ணுவதை விட்டுவிட்டு ஹீரோ அவதாரம் எடுத்து தற்போது திணறிக் கொண்டிருக்கிறார்.

Also Read: எவ்வளவு டென்ஷன் ஆனாலும் நடிகை மீது கை வைக்காத ஒரே இயக்குனர்.. சீக்ரெட்டை புட்டு புட்டு வைத்த சந்தானம்

இவர் ஹீரோவாக நடித்த எந்த படமும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஓடவில்லை. இருப்பினும் காமெடி டிராக்கிற்கு வர இப்போது வரை தயக்கம் காட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் ஹீரோவாக நடிக்காமல் தொடர்ந்து காமெடியனாகவே நடித்திருந்தால் அவர் ரேஞ்ச் எங்கேயோ போயிருக்கும். அவரைப் போலவே தான் இப்போது இன்னும் இரண்டு நடிகர்கள் வழி மாறி போய்க் கொண்டிருக்கின்றனர்.

கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக ரவுண்டு கொட்டிக் கொண்டிருந்த விஜய், இப்போது அரசியலில் களம் இறங்குவதற்காக அசுர வேகத்தில் எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறார். முதலில் இதில் ஈடுபாடு இல்லாத விஜய், அப்பா கொடுத்த ஆசையாலும் அடுத்த எம்ஜிஆர் ஆகிவிடலாம் என்ற பேராசையில் இப்படிப்பட்ட முடிவை எடுத்திருக்கிறார்.

Also Read: பாட்டுல இல்ல நேரிலேயே ரஜினி பதிலடி கொடுக்க நேரம் வந்துருச்சு.. இளைய தளபதிக்கு ஆப்படிக்கும் நாள்

அதே போல தான் காமெடியில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த வடிவேலு இப்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ரெட் கார்டு பிரச்சனையில் சிக்கிய வடிவேலு தனது செகண்ட் இன்னிங்ஸை நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் துவங்கினார். ஆனால் அதில் அவருடைய காமெடி ஒர்க் அவுட் ஆகாததால் இப்படி ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

பெரும்பாலான படங்களில் காமெடியனாக பார்த்த வடிவேலுவை முதல் முதலாக மாமன்னன் படத்தில் டெரர் பீஸ் ஆக பார்ப்பதற்கு கொஞ்சம் வித்தியாசமாகவே இருந்தது. இவருடைய நடிப்பை பலரும் பாராட்டினாலும் வடிவேலுவை காமெடியனாக பார்க்கவே ரசிகர்கள் விரும்புகின்றனர். 

Also Read: லியோவுக்கு ஜெயிலர் கொடுத்த அதிர்ச்சியே இன்னும் குறையல.. சூடு ஆறும் முன் போட்டிக்கு வந்த சூர்யா

இவ்வாறு சினிமாவில் கொண்டாடப்பட்ட சந்தானம், ஹீரோவாக மாறி தறி கெட்டுப் போய் நிற்பது போலவே விஜய், வடிவேலுவும் தங்களது ரூட்டை  மாற்றியதை எல்லாம் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று தெரியவில்லை. கடைசியில் இவர்களும் சந்தானம் போல் ஏமாறாமல் இருந்தால் சரிதான்.

Trending News