Lokesh-Vijay: பல எதிர்பார்ப்புகளை உள்ளடக்கிய, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் தான் லியோ. தற்பொழுது இப்பட ரிலீஸ் குறித்து, போட்டியாய் களம் இறங்கும் படங்களால் ஏற்பட்ட சிக்கலை பற்றி இத்தொகுப்பில் காணலாம்.
பல பிரபலங்கள் இணைந்து விஜய் நடிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ள நிலையில், இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளிவரும் என முன்னரே தேதியை லாக் செய்தனர். பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு படத்தின் வசூலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் தற்போது திடீரென குண்டு வீசப்பட்டுள்ளது.
Also Read: பீஸ்ட் தோல்விக்கு யார் காரணம் நெல்சனா இல்ல விஜய்யா.? சிதர் தேங்காய் போல உண்மையை உடைத்த கலாநிதி மாறன்
பெரிய நடிகர்களின் படங்களை ஒன்றாக விட்டால், வசூலில் பாதிப்பு ஏற்படும் என்பதற்காக தனித்தனியாக விட ஆரம்பித்தனர். அதைக் கொண்டே ரஜினி படமான ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளிவந்தது. அவ்வாறு விஜய் படமும் தீபாவளியை முன்னிட்டு வெளிவரும் என முடிவு செய்யப்பட்ட நிலையில், புதிதாய் சில படங்கள் அதே நாளில் இறங்குவதாக கூறப்படுகிறது.
அவ்வாறு தற்பொழுது கன்னட மாஸ் ஹீரோவான சிவராஜ்குமார் நடிக்கும் கோஸ்ட், பாலையா நடிப்பில் பகவந்த் கேசரி மற்றும் ரவிதேஜா நடிப்பில் டைகர் நாகேஸ்வர ராவ் படமும் அதே நாளில் வெளியாகிறதாம். இவை மற்ற மாநிலங்களில் கண்டிப்பாக வசூல் ரீதியாக மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தெரிந்து ஒன்றுதான்.
இருப்பினும் தமிழ்நாட்டில் கொஞ்சம் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவதன் காரணமாக தற்பொழுது லியோ பட குழுவினர் புலம்பி வருகின்றனர். ஏற்கனவே நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த பீஸ்ட் படம் வெளியாகும் போது தான் கேஜிஎப் வெளிவந்து வசூலில் சக்கைபோடு போட்டது.
இதுவும் பீஸ்ட் படத்தின் தோல்வியாக பார்க்கப்படுகிறது. ஆனால் தற்பொழுது லியோ படத்தை பொறுத்தவரை வாய்ப்பு இல்லை என்றாலும் மற்ற மாநிலங்களில் பெரிய மாற்றத்தை இது ஏற்படுத்தும் என்பது கொஞ்சம் வருத்தத்தை அளித்து வருகிறது. இனி நடப்பவையை எதிர்பார்த்து காத்து இருப்போம்.