திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

Kavin : கவின் கைவசம் குவியும் படங்கள்.. ரிவ்யூகாக ஐ டி கூலிப்படை செய்யும் வேலை

சமூக வலைதளங்களில் கடந்த ஒரு வாரமாக கவின் பற்றி தான் பேச்சு. அவர் நடித்து சமீபத்தில் வெளியான படம் ஸ்டார். இந்த படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தை நேரில் பார்த்த அனைவரும் நல்லா இல்லை என்று தான் கூறுகிறார்கள்.

ஸ்டார் படத்தில் சம்பந்தமே இல்லாமல் ஒரு கிளைமாக்ஸ் காட்சியை மட்டும் நன்றாக வைத்து ஏமாற்றிவிட்டார்கள் என்று பல பேர் கூறுகிறார். ஆனால் சமூக வலைதளங்களில் இதற்கு நேர்மாறாக படத்தைப் பற்றி ஆகா ஓகோ என்று விமர்சனங்கள் வருகின்றது.

ரிவ்யூகாக ஐ டி கூலிப்படை செய்யும் வேலை

கவினும் கைவசம் அடுத்தடுத்து மூன்று நான்கு படங்களை கமிட் செய்து வைத்துள்ளார்.இவர் தற்போதுக்கு “கிஸ்” சென்று ஒரு படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். அந்த படம் வருகிற தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது. லிப்ட் , டாடா, ஸ்டார் கிஸ் என்று நான்கு எழுத்து பெயர்களையே கவின் தேர்ந்தெடுப்பது விந்தையாக இருக்கிறது.

தற்போது கவினுக்கு இன்னும் மூன்று படங்கள் இருக்கிறது, ஊர் குருவி, பிளடி பக்கர், அதுபோக குட் நைட் இயக்குனர் நாயக் உடன் ஒரு படம் என கமிட்டாகி வருகிறார். இவரின் படத்திற்கு சமூக வலைத்தளங்களில் மட்டும் நல்ல ரிவ்யூ கிடைக்கிறது.

ஸ்டார் படத்திற்கு சோசியல் மீடியாவில் மட்டும் நல்ல ரிவ்யூ வந்ததற்கு காரணமாக ஒரு விஷயத்தை கூறுகிறார்கள். அதாவது கவினின் நண்பர் ஒருவர் சாப்ட்வேர் கம்பெனி வைத்திருப்பதாகவும். அவருடன் கவினுக்கு உயிருக்கு உயிரான நட்பு இருக்கின்றதாம் அவரால் தான் சமூக வலைத்தளங்களில் செயல்படும் ஐ டி கூலிப்படைகள் இவ்வாறு கவின் படங்களை உயர்த்துகிறார்கள் என்று பேசப்படுகிறது

Trending News