திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சிவாஜி, எம் ஜி ஆருக்கு கிடைத்த அறிய வாய்ப்பு.. கலைஞர் கொடுத்த வாய்ப்பை பெறாத 3 ஜாம்பவான்கள்

கலைஞர் மு கருணாநிதி சினிமா மற்றும் அரசியல் இரண்டிலுமே தனது ஆதிக்கத்தை காட்டியுள்ளார். வார்த்தை வித்தகரான கலைஞர் யார் எந்த கேள்வி கேட்டாலும் அதை நகைச்சுவை கலந்து சாதுர்யமாக பதில் சொல்வதில் வல்லவர். அதனால் தான் அரசியலில் இவரால் நீண்ட தூரம் பயணிக்க முடிந்தது.

இவருடைய வசனங்களால் சிவாஜி, எம்ஜிஆர் போன்ற நடிகர்களின் படங்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. முதல்முறையாக எம்ஜிஆரின் ராஜகுமாரி படத்தின் மூலம் திரைக்கதை எழுத்தாளராக கருணாநிதி அறிமுகமானார்.

இந்நிலையில் சிவாஜியின் முதல் படமான பராசக்தி 175 நாட்களுக்கு மேல் திரையரங்குகள் ஓடியது. பராசக்தி படம் வெற்றி பெற கலைஞரின் அழகான மற்றும் நீளமான வசனங்களும் முக்கிய காரணம். சிவாஜி திரையில் இந்த வசனங்களை பேசும்பொழுது ரசிகர்கள் மத்தியில் கரவொலி எழுந்துள்ளது.

மேலும் மகாபாரதம், ராமாயணம் என கடவுள் மற்றும் அரசர்களின் கதை சூழ்ந்திருந்த நிலையில் குடிமக்களின் கதைகளை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டவர் கருணாநிதி. மேலும், பல அந்தகால நடிகர்கள் கலைஞரின் வசனத்தால் பெரிய நட்சத்திரங்களாக மாறியுள்ளனர்.

ஆனால் கலைஞர் திரைத்துறையில் இருந்தபோதே வந்தவர்கள்தான் ரஜினிகாந்த், கமலஹாசன் மற்றும் ஸ்ரீதேவி. இவர்கள் சினிமாவில் பல சாதனைகள் புரிந்துள்ளனர். ஆனாலும் கடைசி வரை இவர்களுக்கு கலைஞர் வசனத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

மேலும் கமலஹாசனின் பெரும்பாலான படங்களில் அவரது நண்பர் கிரேசி மோகன் வசனம் எழுதி இருப்பார். நையாண்டியுடனும், நகைச்சுவையுடனும் இருந்ததால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் கிரேசி மோகனின் பிறப்பிற்குப் பிறகு கமலஹாசன் படங்களில் நகைச்சுவை என்ற இடம் வெற்றிடமாக உள்ளது.

Trending News