வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சுந்தரி சீரியலுக்கு பதிலாக வரிசையில் காத்திருக்கும் 3 சீரியல்கள்.. சன் டிவியை மெருகேற்ற கலாநிதி போட்ட ஸ்கெட்ச்

Sun Tv New Serials: சன் டிவிக்கு போட்டியாக எத்தனை சேனல்கள் வந்தாலும் அசைக்க முடியாத இடத்தில் சிம்மாசனமாக இருப்பது சன் டிவி சீரியல் தான். அதற்கு காரணம் ஏதாவது சில சீரியல் கொஞ்சம் டல் அடித்தாலும் அதை தூக்கிவிட்டு அதற்கு பதிலாக புத்தம் புது சீரியலை கொண்டு வருவதை சன் டிவியின் சிறப்பு அம்சமாக இருக்கும். அந்த வகையில் இப்பொழுது வரை எந்த சீரியலும் மோசம் என்று சொல்வதற்கு ஏற்ப ஒளிபரப்பாகவில்லை.

ஆனாலும் சன் டிவி சேனல் பொருத்தவரை புத்தம் புது சீரியல்களை அடுத்தடுத்து இறக்கி கொண்டே வருகிறார்கள். அந்த வகையில் இப்பொழுது 3 புது சீரியல்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் சுந்தரி சீரியல் மட்டும் தான் இந்த வாரத்துடன் முடியப்போகிறது. அப்படி என்றால் இந்த நேரத்தில் ஒரு சீரியல் மட்டுமே ஒளிபரப்பு செய்வார்கள். ஆனால் ரெண்டு சீரியலுக்குமே சன் டிவியில் இருந்து பிரமோ வெளியாகிவிட்டது.

அந்த வகையில் அன்பே வா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த டெலினா டேவிஸ், ஆடுகளம் என்ற சீரியல் மூலம் மறுபடியும் நடிக்க வந்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக விஜய் டிவி மௌன ராகம் என்ற சீரியலில் வருண் கதாபாத்திரத்தில் நடித்த சாமுவேல் என்பவர் ஆடுகளம் சீரியலில் ஹீரோவாக நடிக்கப் போகிறார். அதே மாதிரி அன்னம் என்ற சீரியலில் அயலி படத்தின் ஹீரோயின் கமிட் ஆகி இருக்கிறார்.

இதனை தொடர்ந்து ராகினி என்ற சீரியலில் சுந்தரி சீரியலில் ஹீரோவாக நடித்த வரும் கார்த்திக் கமிட் ஆகி இருக்கிறார். இப்படி மூன்று சீரியல்கள் வரிசையில் இருக்கிறது. ஆனால் சுந்தரி சீரியல் மட்டும் தற்போது முடிவடைவதால் அதற்கு பதிலாக அன்னம் சீரியல் வரப்போகிறது.

இதனைத் தொடர்ந்து மீதம் இருக்கும் இரண்டு சீரியல்களுக்கும் கலாநிதி போட்டோ ஸ்கெட்ச் என்னவென்றால் தற்போது எந்த சீரியலில் டிஆர்பி ரேட்டிங் கம்மியாக இருக்கிறதோ, அந்த சீரியலை முடித்துவிட்டு அதற்கு பதிலாக புத்தம்புது சீரியலை இறக்க சொல்லி இருக்கிறார். அதனால் கூடிய விரைவில் மத்த இரண்டு சீரியல்களும் சன் டிவியில் வந்து ஜொலிக்கப் போகிறது.

Trending News