வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

பார்த்திபனுக்கு அசிஸ்டெண்டாக இருந்து வெற்றி பெற்ற 3 இயக்குனர்கள்.. வாண்டெட் லிஸ்டில் யாரு தெரியுமா?

Actor Parthiban: பார்த்திபன் இயக்குனர் பாணியில் எடுக்கும் படங்கள் அனைத்தும் சற்று வித்தியாசமான கதைகளைக் கொண்டதாக அமைந்திருக்கும். அத்துடன் இயக்குனர், நடிகர் என பன்முகத் திறமைகளை கைவசம் வைத்துக்கொண்டு, புரியாத புதிராக பேசுவதில் இவருக்கு நிகர் யாரும் கிடையாது.

இவர் இயக்குனராக இருந்த பொழுது இவரிடம் பலர் உதவி இயக்குனராக பணி புரிந்திருக்கிறார்கள். அதில் சொல்லக்கூடிய அளவிற்கு மிக ஹிட் படங்களை கொடுத்து வெற்றி பெற்ற இயக்குனர்கள் என்று மூன்று பேர் நம் மனதில் இடத்தை பிடித்துள்ளனர்.

Also read: இளசுகளை குறிவைத்து களமிறங்கும் பார்த்திபன்.. அடுத்த சர்ச்சைக்கு போட்ட பிள்ளையார் சுழி

அதிலும் 90ஸ் காலத்தில் வெளிவந்த படங்கள் அனைத்தும் நம் மனதில் நிலையாக நிலைத்து நிற்பதற்கு இந்த இயக்குனர் தான் காரணம் என்று சொல்லலாம். அந்த வகையில் நமக்கு மிகவும் பரிச்சயமான இயக்குனர் விக்ரமன். இவர் பார்த்திபன் இயக்கிய புதிய பாதை படத்தில் உதவியாளராக பணியாற்றி இருக்கிறார்.

அதன் பின் அடுத்த வருடமே புதுவசந்தம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிவிட்டார். இதனைத் தொடர்ந்து பூவே உனக்காக, சூரிய வம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தைப்போல, உன்னை நினைத்து, பிரியமான தோழி போன்ற வெற்றிப் படங்களை கொடுத்து சினிமாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

Also read: டைட்டில் வின்னர் பட்டம் அவருக்கு தகுதியே கிடையாது.. முதல் முறையாக ஓப்பனாக பேசிய விக்ரமன்

அடுத்ததாக கரு பழனியப்பன், இவர் பார்த்திபனுடன் புள்ள குட்டிக்காரன், ஹவுஸ்புல் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். இதைத்தொடர்ந்து பார்த்திபன் கனவு, சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், மந்திரப்புன்னகை போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார்.

அடுத்து தற்போது வாண்டெட் இயக்குனர் லிஸ்டில் இடம் பெற்றிருப்பவர் தான் எச் வினோத். இவர் பார்த்திபன் இயக்கிய பச்சைக் குதிரை படத்தின் மூலம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். அதன் பின் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று , நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார். அத்துடன் தற்போது கமல் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் KH233 படத்தை இயக்க இருக்கிறார்.

Also read: காப்பி அடிப்பதில் தலைவனை மிஞ்சிய எச் வினோத்.. தலைவலி தாங்காமல் தெவங்கிய ரசிகர்கள்

Trending News