திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

கமலுடன் இதுவரை நடிக்காத 3 நடிகைகள்.. விடாமல் துரத்தியதால் உலகநாயகனிடம் மாட்டிக் கொண்ட ஜானகி மாமி

3 Tamil Actresses who are not willing to act with Actor Kamal Haasan: நடிப்புக்கு இலக்கணம் என்றால் அது நமது உலகநாயகன் கமலஹாசன் ஆக மட்டுமே இருக்க முடியும்.  அறிமுகமாகி இன்றுவரை படத்திற்கு படம் கெட்டப்பை சேஞ்ச் பண்ணி ரசிகர்களுக்கு புது பரிமாணத்தை  உருவாக்கி வரும் கமலுடன், ஒரு படமாவது பண்ண வேண்டும்! என  இயக்குனர்கள், நடிகர்கள் பலர் தவம் கிடக்கின்றனர்.

ஆனால் நடிகைகள் சிலரோ கமலுடன் படம் என்றாலே பயந்து ஓடிவிடுவார்களாம். சைவ முத்தத்தில் சமரசமாகாத கமல், தன் படங்களில் சாகசத்தை காட்டும் மன்னனாகவே இருந்தார் என்பதே இதற்கான காரணம்.

புன்னகை மன்னன், மகாநதி, குருதிப்புனல், உத்தமவில்லன், விஸ்வரூபம், ஹே ராம், தூங்காவனம் என பல படங்களிலும் லிப் லாக்கை சாதாரணமாக செய்து ரசிகர்களின் கண்களை கூச செய்திருந்தார்.  இதனால் பயந்த சில நடிகைகள் வாய்ப்பு கிடைத்த போதும் கமல் படத்தில் நடிக்க நோ சொல்லிவிட்டனராம்.

நதியா: தமிழ் சினிமாவின் வசீகரா தோற்றத்துடன் கிசுகிசுகளில் சிக்காத ஒரே நடிகை நதியாவாக தான் இருக்க முடியும்.  புது முகங்கள் முன்னணி ஹீரோக்கள் என எந்த ஹீரோவின் படமாக இருந்தாலும்  தன்னுடைய கதாபாத்திரம் நிறைவாக இருந்தால் மட்டுமே அப்பாடத்தில் ஒப்புக்கொண்டு நடிப்பாராம் நதியா.மேலும் படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே கிளாமராகவும், படுக்கையறை காட்சிகளிலும், முத்த காட்சிகளிலும் நடிக்க மாட்டேன் என்று கண்டிஷன் போட்டு விடுவாராம். இதனாலையே என்னவோ நதியா கமலுடன் நடிக்க முடியாமல் போனது.

Also read:  நாலு கெட்டபில் மிரட்ட வரும் ரங்கராய நாயக்கன்.. மணிரத்தினத்தை நிம்மதி பெருமூச்சு விட வைத்த கமல்

கனகா: கரகாட்டக்காரன் படத்தில் துவங்கி 90ஸ் காலகட்டத்தில் ரஜினி பிரபு கார்த்திக் என அனைத்து முன்னணி  நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்டு நடித்த கனகா கமலுடன் நடிக்க வந்த வாய்ப்பை நிராகரித்தார்.

ரோஜா: தற்போது ஆந்திராவின் அமைச்சராக உள்ள ரோஜா அவர்கள் 90ஸ் இல் ரஜினி தொடங்கி பிரபு, கார்த்திக், சரத்குமார், விஜய், அஜித் வரை முன்னணி நடிகர்கள் பலருடமும் இணைந்து நடித்தார். நல்ல மார்க்கெட்டுடன் முன்னணி நடிகையாக இருந்த ரோஜாவிற்கு கமலஹாசன் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதை வேண்டாம் என்று நிராகரித்து விட்டாராம்.

இந்த நடிகைகள் போன்று மீனாவும் கமலுடன் நடிக்க அடம்பிடித்து வந்த நிலையில்  ரவிக்குமாரின் வற்புறுத்துதலால் அவ்வை சண்முகியில் கமலுடன் இணைந்தார். படத்தில் வைக்கப்பட்ட முத்த காட்சியில் பயந்து கொண்டே மாமி தயங்கி நிலையில் கடகடவென முத்த காட்சி படமாக்கபட்டு முடிக்கப்பட்டது என்று பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார் மீனா.

Also read : 25 வருடம் மிளகாய் அரைத்த ரஜினி.. கமலின் பார்ட் டைம் அரசியல், தில்லாக இறங்கிய விஜய்யின் தலைமை எப்படி இருக்கும்.?

Trending News