வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

லியோவில் எதிர்பார்க்கப்பட்ட 3 விஷயங்கள்.. ஏமாற்றத்தை கொடுத்துள்ள லோகேஷ்

Leo-Lokesh: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது லியோ படம். ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சில விஷயங்கள் லியோ படத்தில் இடம்பெறாதது ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. பொதுவாக லோகேஷ் படம் என்றாலே எப்போதுமே ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் சில விஷயங்களை நினைத்து சென்றிருப்பார்கள்.

அதை பூர்த்தி செய்வதோடு மட்டும் அல்லாமல் நாம் எதிர்பார்க்காத பல விஷயங்களையும் லோகேஷ் கொடுத்து ஆச்சரியத்தில் உறைய வைத்திருப்பார். இப்போது தளபதி கிடைத்திருந்தால் சும்மா விடுவாரா என்று ரசிகர்கள் மூன்று விஷயத்தை எதிர்பார்த்து சென்றிருந்தனர். அதாவது விஜய் படங்கள் என்றாலே எப்பொழுதுமே ஆக்சன் காட்சிகள் அதிரடியாக இருக்கும்.

விஜய்க்கு என்று சில மாஸ் சீன்கள் இடம்பெறும் என எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றம் தான் கிடைத்திருக்கிறது. அடுத்ததாக சஞ்சய் தத், அர்ஜுன் போன்ற பல பிரபலங்கள் லியோ படத்தில் நடித்திருப்பதால் வலுவான வில்லனுக்கு உண்டான கதாபாத்திரம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

ஆனால் மாஸ்டர் படத்தில் பவானி கதாபாத்திரம் போல் லியோ படத்திற்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வில்லன் கதாபாத்திரங்கள் எதுவும் எடுபடவில்லை என்பது தான் நிதர்சனம். மூன்றாவதாக விக்ரம் படத்தில் ரோலக்ஸ் போன்ற ஒரு முக்கிய கதாபாத்திரம் கேமியோவில் இடம்பெறும் என்று பெரிதும் நம்பப்பட்டிருந்து.

இல்லையென்றால் கமலாவது சில காட்சிகளில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது குரல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும் லோகேஷ் இதுவரை தன்னுடைய படங்களில் இருக்கும் விஷயங்கள் இந்த படத்தில் இருக்காது. அதை எதிர்பார்த்து வர வேண்டாம் என்று பிரமோஷன் நிகழ்ச்சிகளிலேயே கூறியிருந்தார்.

ஆனாலும் ரசிகர்கள் முதல் பாதியில் லோகேஷ் படமாக இருந்தாலும் இரண்டாம் பாதி பெரிய அளவில் கவரவில்லை என்று தங்களது கருத்துக்களை கூறியிருக்கின்றனர். மொத்தத்தில் படம் ரிலீசுக்கு முன்பு இருந்த எதிர்பார்ப்பு இப்போது சுக்குநூறாகி இருக்கிறது. ஆனாலும் சிஜி காட்சிகளை தத்ரூமமாக லோகேஷ் கொடுத்ததற்கு கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

Trending News