சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொண்ட 3 டாப் நடிகர்கள்.. கமல், ரஜினிக்கு டஃப் கொடுத்த ஹீரோ

Competitors of Rajini and Kamal: தற்போது முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர்கள் அனைவரும் ஆரம்ப காலத்தில் நிறைய போட்டிகளை சந்தித்த பிறகு தான் இந்த நிலைமையை அடைந்திருக்கிறார்கள். அந்த வகையில் ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜித் இவர்கள் சினிமாவில் வளர்ந்து வரும் கட்டத்தில் இவர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் சில நடிகர்கள் இருந்திருக்கிறார்கள்.

அதில் 80களில்  ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த மோகனின் படம் தான் கொடி கட்டி பறந்தது. அதிலும் இவர் மைக் பிடித்து பாட ஆரம்பித்தால் மெய்மறந்து இவரை ரசித்துப் பார்க்கும் அளவிற்கு அனைவரது ஃபேவரிட் ஹீரோவாக இருந்தார். மேலும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் மனதில் இவர் நடித்தால் அந்த படம் சூப்பர் ஹிட் ஆகி, வசூல் அளவில் லாபத்தை கொடுக்கும் என்பதை மலை போல் நம்பி வந்தார்கள்.

Also read: ரஜினியை சந்தோஷப்படுத்த விஜய்யை அசிங்கப்படுத்திய தமன்னா.. இனி உங்களுக்கு வாய்ப்பு இல்ல அம்மணி

அதனால் இவரை தேடி படம் வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே வந்தது. முக்கியமாக ஒரு வருடத்தில் 12 படங்கள் என மாதம் ஒரு படம் நடித்து வெளியிடுவார். அப்படிப்பட்ட இவரது படங்கள் வெளிவந்தால் ரஜினி, கமல் படங்கள் டம்மியாக போய்விடும். அந்த அளவிற்கு மக்களின் நாயகனாக வலம் வந்தவர் மைக் மோகன்.

இப்படி தொடர்ந்து நடிக்கும் பொழுது வித்தியாசமாக நடிக்கிறேன் என்று உருவம் படத்தில் நடித்து இவருக்கான வாய்ப்பை இவரை கெடுத்துக் கொண்டார். இப்படத்திற்குப் பிறகு இவருடைய கேரியரே பாலாகிவிட்டது. இவருக்கு அடுத்து தன்னுடைய அப்பாவியான முகத்தை வைத்துக்கொண்டு எதார்த்தமான படங்களில் நடித்து வந்தவர் தான் ராமராஜன். எங்க வீட்டு பாட்டுக்காரன் படத்தின் மூலம் அதிகமாக மக்களை கவர்ந்தார்.

Also read: ரஜினிக்கு அலர்ஜியான 5 விஷயங்கள்.. எல்லாத்துக்கும் முடிவு கட்டி ஓட விட்ட சூப்பர் ஸ்டார்

அடுத்து தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்தார். இவர் படம் வெளியாகிறது என்றால் ரஜினி மற்றும் கமல் படங்களை வெளியிடுவதை யோசித்தான் செய்வார்கள். மேலும் இவரைத்தான் அடுத்த எம்ஜிஆர் என்று மக்கள் பாராட்டி கொண்டாட ஆரம்பித்தார்கள். ஆனால் கதையை ஒரே மாதிரியாகவே தேர்ந்தெடுத்து காலத்திற்கு ஏற்ப படங்களை கொடுக்க முடியாமல் தடுமாறி விட்டார்.

இவர் மட்டும் சரியான படங்களை தேர்ந்தெடுத்து நடித்திருந்தால் எம்ஜிஆர் மற்றும் ரஜினி அளவுக்கு பெரிய ஆளாக இருந்திருப்பார். இவர்களைத் தொடர்ந்து விஜய் அஜித்துக்கு மிகப்பெரிய போட்டியாளராக இருந்தவர் தான் பிரசாந்த். போட்டியாளர் என்று சொல்வதை விட விஜய், அஜித்தை விட முன்னணியில் இருந்தவர் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.அந்த அளவிற்கு இவரது நடிப்புக்கும் படங்களுக்கும் ரசிகர்களிடமிருந்து ஏகபோக வரவேற்பு கிடைத்தது.

இப்படி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துட்டு வந்த இவர் திடீரென்று கதையை சரியாக தேர்வு செய்யாமல், நடிப்பில் கவனம் செலுத்தாமல், இவருடைய அப்பா பேச்சைக் கேட்டு வித்தியாசமாக நடித்ததால் மொத்தமாக இவருடைய கேரியர் காலி ஆயிடுச்சு. இப்பொழுது மட்டும் இந்த மூணு பேரும் இருந்தாங்கன்னா தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, விஜய், கமல், அஜித்துக்கு மிகப்பெரிய போட்டியாளராக இருந்திருப்பார்கள்.

Also read: கடைசி காலத்தில் அழைத்து அள்ளிக் கொடுத்த எம்ஜிஆர்.. நெகிழ்ந்து போன கமல்

Trending News