செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

14 போட்டியாளர்களுக்கு சவால் விடும் 3 வைல்ட் கார்டு என்ட்ரி.. வெளியேற போவது யாரு?

Biggboss 7: பிக்பாஸ் வீட்டை விட்டு நேற்று கானா பாலா வெளியேறியதை தொடர்ந்து இன்று பல ட்விஸ்ட்டுகள் வீட்டில் நடக்க இருக்கிறது. அதிலும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோ மிக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதன்படி இன்று வீட்டுக்குள் மூன்று புது வரவுகள் வர இருக்கின்றனர்.

ஏற்கனவே 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் வந்த நிலையில் இருவர் எவிக்ட் ஆகி சென்றுள்ளனர். அதைத்தொடர்ந்து மேலும் மூன்று பேர் களமிறங்குவது வீட்டில் இருக்கும் 14 போட்டியாளர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும் பிக்பாஸ் அவர்களுக்கு ஒரு சவாலை கொடுத்திருக்கிறார்.

Also read: திட்டம் போட்டு இதெல்லாம் செய்றீங்களா.. ஆண்டவரின் அதிரடியால் வாயடைத்துப் போன விச்சு, அச்சு

அதன்படி இந்த வாரத்தில் இருந்து டாஸ்க்குகள் கடுமையாக கொடுக்கப்பட இருக்கிறது. அதில் வெற்றி காண்பவர்கள் தான் விளையாட்டை தொடர முடியும். தோல்வி அடைப்பவர்கள் புதுவரவுகளுக்கு வழி கொடுத்து வெளியேற வேண்டும். இதனால் போட்டியாளர்கள் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

அதற்கான பிரமோ தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அதிலும் விஷ்ணு நாம துரத்த நினைக்கிறதே அவங்கள இல்ல நம்மள என்று சொல்வது சத்தியமான உண்மை. அந்த வகையில் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: நீங்களாச்சு உங்க பிக்பாஸாச்சு ஆள விடுங்க.. மூட்டை முடிச்சை கட்டி தெறித்து ஓடிய பிரதீப்

மேலும் அந்த மூன்று புதுவரவுகள் யார் என்ற தேடலும் இப்போது தொடங்கியுள்ளது. ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதில் தற்போது புதுப்புது விஷயங்களை அறிமுகப்படுத்தி வரும் விஜய் டிவி மொத்தமாக டிஆர்பி-ஐ தக்க வைக்க தீயாக வேலை செய்து கொண்டிருக்கிறது.

Trending News